இணை சேர முடியாத
தண்டவாளங்களின்
இதயத் துடிப்பு அடங்கிக் கிடக்கிறது.
அதன் நீள நாவுகளில்
துருவேறி சிவந்து தெரிகிறது
நோயச்சத் துயரம்.
கணக்கிலடங்கா வாழ்வை
தூரங்களைக் கடந்து
சுமந்து வந்த
பல் சக்கரப் புழுவின்
நெஞ்சில் குத்தியது
நோய்க் காரணிப் பட்டம்.
முடிவிலி காலத்தை
அபாய ஒலியாய்
வீசிச் சென்ற
காலமற்ற காலத்தில்
பெருமூச்செறிகிறது
ரயில்களின் ஆன்மா.
நன்றி: படைப்பு.காம்
No comments:
Post a Comment