Pages

Friday, February 4, 2011

வான்காவின் கண்




மஞ்சள், சிவப்பு, பச்சை
நீலம், வெள்ளை, கறுப்பு என
விழுந்து கிடந்தவனைப் பார்த்து
காதலித்தவனா என்றாள்.
காதலித்ததால்
காதழித்தவன் என்றேன்.
ஓவியமெங்கும்
ரத்தம் வடியும் கண்களாயின.

நன்றி: உயிரோசை 

2 comments:

ஆதவா said...

நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ தெரியாது, வான்காவின் காது என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி வைத்திருந்தேன். பிறகு ஏனோ கவிதை மாதிரி இல்லாததால் அழித்துவிட்டேன்.

கவிதை சிக்கென அருமையாக இருக்கிறது. குறிப்பாக “காதழித்தவன்” சொற்பதத்தை ரசித்தேன்.
உயிரோசையில் இடம்பெற்றதற்கு வாழ்த்துகள்.

RAGUNATHAN said...

@ஆதவா

வருகைக்கு நன்றி நண்பரே. ஐந்தாறு ஆண்டுகள் முன்பு வான்காவின் வரலாற்றை படித்தேன். அதிலிருந்து அவருடைய ஓவியங்களை ரசிக்க ஆரம்பித்தேன். பின்பு ஓவியப் பயிற்சிக்கு சென்று வாட்டர் கலர் ஓவியம், லேண்ட்ஸ்கேப் வரைவது என்று முயற்சித்தேன். தனது காதலி கூறினாள் என்பதற்காக காதை அறுத்துக் கொண்ட கலைஞனைப் பற்றி திடீரென நினைவு வந்தது. அதனால் இந்தக் கவிதை தோன்றியது.

பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி.