Pages

Sunday, January 23, 2011

காதில் நுழையும் ரயில்



இருள் வடிந்த நேரத்தில்
பல் குச்சியுடன்
ரயில்பாதையோரம் போராடுகிறான்
அழுக்கில் வாசம் செய்யும்
பரட்டைத் தலைச் சிறுவன்.

தொலைவைத் தொலைத்து
வரும் ரயில்
காதில் நுழைவதை
எதிர் நோக்கி
புன்னகைத்து நிற்கிறான்
வாழ்வைப் பிளந்து செல்லக்
காத்திருக்கும் கிழவன்.

அதிர்வின் பேரோசையுடன்
செவியைக் கிழித்து
வெளியேறுகிறது ரயில்.

தாண்ட இயலாத பூனை கண்டு
மௌனத்தின் நாக்குகள் நீள
இருளை இழுத்துக் கண்ணில் போட்டு
மனதைக் கிடத்துகிறான் தண்டவாளத்தில்.

கணங்கள் கனத்து
காணாமல் போனபோது
ரயிலும் கிழவனும்
போய்விட்டிருந்தார்கள்.

4 comments:

அன்புடன் நான் said...

கவிதை நல்லாயிருக்குங்க...

RAGUNATHAN said...

@ சி. கருணாகரசு

நன்றி நண்பரே... வருகைக்கும், வாழ்த்துக்கும்...

Chitra said...

அருமையாக இருக்குதுங்க!

RAGUNATHAN said...

@ chitra

நன்றி சித்ரா, வருகைக்கும் பாராட்டுக்கும்... :)