மினுக்கும் நீலவானில்
ஒளிரும் நிலவின் அருகே
சிரிக்கும் ஒரு நட்சத்திரம்
நினைவூட்டுவதோ
உன் நகை பூத்த இதழோரம்
மென் வெண்முகில் கீற்றொன்று
காற்றில் அசைந்து நகர்ந்து
கிளர்த்துவதோ
உன் மெல்லாடை ஸ்பரிசம்
மாலை இள மழையின்
மண் வாசம் எழுப்புகிறது
தீரா உன் நினைவுகளின் நறுமணம்.
No comments:
Post a Comment