Skip to main content

Posts

பிருஷ்டத்தில் பதிந்த கவிதை

பள்ளி இறுதியாண்டு வகுப்பு முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு சிறிய அச்சகத்தில் மதிய நேரங்களில் நான் வேலை செய்தேன் . என் தாய் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை . எனது முதலாளியுடனும் கவர்ச்சியான அழகுடைய அவரது மனைவியுடனும் மிகுந்த நட்புக் கொண்டிருந்தேன் . அந்தப் பெண்மணி எனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து சென்றதால் என் தாய் அவருக்கு சிகை வெட்டிவிடவோ அல்லது அப்போதைய ஸ்டைலுக்கேற்றபடி சாயமடித்துவிடவோ செய்தார் . ஒரு நாள் தனது கவிதைகளும் பிரசுரமாக வேண்டும் என்று நினைப்பவனைப் போல் அச்சுத் தொழில் தொடர்பான விஷயங்களை ஆர்வத்துடன் நான் கற்றுக் கொண்டேன் . அப்போது சிறிது காலத்துக்கு ஈய எழுத்துருக்களை அச்சுக் கோர்க்கும் பொறுப்பில் இருந்தேன் . முதலாளியின் மனைவி செனோரா லியோனார் அச்சுக் கூடத்துக்கு வரும்போதெல்லாம் , எழுத்துருக்கள் வரிசை மாறியிருப்பதைப் பார்த்தால் அதை மீண்டும் சரியாக கோர்க்கும்படி கூறுவார் என்பதால் எப்போதும் கவனத்துடன் வேலை செய்தேன் . அவர் அருகில் இருக்கும் போதெல்லாம் ஒரு வித சலனத்தை என்னுள் ஏற்படுத்தியதை அவரும் நன்றாகவே அறிந்திருந்தார் . குழந்தைப் பருவத்தில் என் பொம்மைக் க
Recent posts

நகங்களைச் சேகரிப்பவன்

Zoran Zivkovic திரு. ப்ரோஸ்கா வெட்டப்பட்ட தனது விரல் நகங்களை சேகரித்து வந்தார். தனது எட்டாவது வயதில் முதல் முதலாக தானாகவே விரல் நகத்தை வெட்டியதிலிருந்தே அவற்றை சேகரிக்கத் துவங்கிவிட்டார். அம்மாவின் உதவி இல்லாமலும் விரல்களைக் காயப்படுத்திக் கொள்ளாமலும் தானே நகங்களை வெட்டியதை நினைத்து அன்று அவருக்குப் பெருமையாக இருந்தது. இந்த வெற்றியின் நினைவாக அந்த பத்து குட்டி அரிவாள்கள் போன்ற நகங்களை சேகரித்து வைக்க முடிவு செய்தார்.  அம்மாவுக்குத் தெரிந்தால் நகங்களைச் சேகரித்து வைக்க விடமாட்டார் என்பதால் அவற்றை ரகசியமாக வைக்க வேண்டும் என்று விரும்பினார். ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் அந்த நகங்களைத் திணித்து அதன் மேல் ஒரு லேபிளை ஒட்டி தேதியை எழுதி வைத்தார். எழுத்துகள் இன்றும் கூட அவருக்கு இடைஞ்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் அந்த சிறிய வயதில் எண்களை எழுதுவதில் சமர்த்தனாகவே இருந்தார். பிறகு அந்தப் பையை மறைவான இடத்தில் வைத்தார். சரியாக இரண்டு வாரங்கள் கழித்து, மீண்டும் நகங்களை வெட்டியபோது சிறிது தயக்கத்துக்குப் பின் அந்தக் குட்டி அரிவாள்களை பிளாஸ்டிக் பையில் போட்டு தேதியை எழுதி

அ.முத்துலிங்கம் எனும் அதிசயக்காரர்

சி றுவயது நினைவு ஒரு சங்கிலித் தொடர் போன்றது. ஒவ்வொருவருக்கும் தனது பால்ய கால மிச்ச நினைவுகள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அது நிகழ்வுகளின் கோர்வையாக இல்லாவிட்டாலும் வாழ்வில் நிகழும் சம்பவங்களின் இருப்பு அவ்வப்போது எழுந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த நினைவுத் தொடர் அறுபட்டுவிடாமல் அதை கோத்துக் கொண்டே செல்வது எல்லோராலும் முடிவதில்லை. பால்ய கால நினைவுகள் ஒரு பழைய கறுப்பு வெள்ளை புகைப்படம் போல எல்லோரது மனதிலும் தொங்கியபடி இருக்கிறது. காலங்கள் மாறினாலும் அனுபவங்கள் ஏறினாலும் சூழ்ந்தழுத்தும் வாழ்க்கையிலிருந்து தப்பிச் செல்ல சிறுவயது நினைவுகள் எல்லோருக்கும் துணையாய் இருக்கின்றன. அந்த வாழ்க்கைக்குள், அந்தக் காலத்துக்குள் பின்னோக்கிச் சென்று முகிழ்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் ஒவ்வொருவருக்குள்ளும் ஊழித் தீயைப் போல எரிந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உறைந்துவிட்ட கடந்த காலம் அந்தப் புகைப்படம் போல மீட்டு வர முடியாததாகவும், ஒரு வழிப்பாதையாகவுமே இருக்கிறது. நினைவுகளால் மட்டுமே அதை தொட்டுப் பார்க்க முடிகிறது. அதற்கு மனதை விட வேறெந்தக் கருவியும்

மிகைல் ஸோச்சென்கோ- தொப்பி

நிகழ்காலத்தில் இருந்துகொண்டு எதிர்காலத்தில் வாழ்பவனே படைப்பாளி. கவிதையாயினும் கதையாயினும் தன் படைப்பினூடே நிகழ்காலத்தை விமர்சித்துக் கொண்டும் கற்பனையில் தனக்கான உலகை படைத்துக் கொண்டும் இருக்கும் மனதை உடையவன் சிறந்த படைப்பாளியாகிறான். காற்றின் திசையையும் வேகத்தையும் தடுக்க இயலாதது போல எழுத்தாளனின் மனதுக்கும் அவன் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் தடை போட முடியாது.  எந்த ஒரு நாட்டிலும் அரசுக்கு எதிரான கொள்கையுடையதாக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் இருந்திருக்கின்றன. அந்தந்த நாடுகளின் அரசுக்கு எதிரான கலகக் குரல் கொண்டதாக அந்தப் படைப்பாளிகள் இருந்துள்ளனர். முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிச சிந்தனையை வளர்த்த எழுத்தாளர்களும், பொதுவுடைமை புரட்சி செய்த நாடுகளில் காணப்பட்ட ஒடுக்குமுறைகளை விமர்சித்த எழுத்தாளர்களும் ஏராளமாய் வாழ்ந்துள்ளனர். உண்மையில் எழுத்தாளன் என்பவன் ஒரு கலகக்காரனே. மானுட அறத்தின், பல்லாயிரம் ஆண்டுகளாய் மானுட மனத்தில் விழுந்து முளைத்து வேர்விட்டு எழுந்து செழித்து நிற்கும் மாறாத விழுமியங்களை காப்பதே தனது எழுத்தின் சாரமாய் கொண்டு தனது கருத்தை அஞ்சாமல் உலகின் முன் வைப்பவன்

ஆன்டன் செகாவ் 'பந்தயம்'- 2

ஆன்டன் செகாவ் பந்தயம் சிறுகதை தொடர்ச்சி... தோட்டத்தில் கும்மிருட்டும் குளிரும் ஒரு சேர இருந்தது. தோட்டத்தை நோக்கி ஊளையுடன்  வந்த காற்று மரங்களை ஓய்வு எடுக்க விடாமல் அசைத்துக் கொண்டிருந்தது. கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தபோதும் தோட்டத்தில் இருந்த வெள்ளை நிற சிலையோ, மரங்களோ, விடுதியோ, சிறை வாசியின் இருப்பிடமோ கண்களுக்குப் புலப்படவில்லை வங்கி அதிபருக்கு. அந்தக்கட்டடத்தின் அருகே சென்று இருமுறை குரல் எழுப்பியும் காவலாளி எந்த பதிலும் அளிக்கவில்லை. அடிக்கும் குளிரில் இந்தக் கட்டடத்தின் சமையலறையிலோ அல்லது  ஏதோவொரு மூலையிலோ காவலாளி உறங்கிக் கொண்டிருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டார். 'எனது திட்டத்தை  செயல்படுத்தினால் முதலில் காவலாளி மீதுதான் சந்தேகம் எழும்'  என்று நினைத்துக் கொண்டார் அந்த வயோதிகர். அந்த இருளில் தட்டுத் தடுமாறி தனிமை சிறை உள்ள விடுதியின் மாடிப் படிகளை கண்டு கொண்டார். உள்ளே சென்று ஒரு தீக்குச்சியை உரசினார். அங்கே ஆளரவமற்று இருந்தது. அந்த இளைஞர் உள்ள அறை கதவு பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீல் எந்த சேதமும் அடையாமல் அப்படியே இருந்தது. தீக்குச்சி அ

ஆன்டன் செகாவ் 'பந்தயம்'-1

மரண தண்டனை வேண்டுமா என்று உலகம் முழுவதும் விவாதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. மூன்று பேரின் முடிவை தள்ளி போட தமிழர்கள் தவித்து வருகின்றோம். ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தை எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் கேள்விக்கான பதிலை  தனது எழுத்தின் மூலம் சிறுகதையாக்கி முடிவை காவியம் போல் செதுக்கியிருக்கிறார் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ். எப்போதோ படித்த இந்தக் கதை எப்போதும் என்னை துரத்திக் கொண்டிருக்கிறது வாழ்ந்தே ஆக வேண்டிய நம் வாழ்க்கையைப்  போல. அந்தக் கதையின் ஆங்கில வழி தமிழாக்கம் இது.                                                                   பந்தயம்   பனி பொழியும் ஓர் இரவில் தனது படிப்பறையில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார் அந்த வங்கி அதிபர். 15 ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு நாளின் பொன் மாலைப் பொழுதில் அவர் அளித்த விருந்தில் நடந்த சம்பவம் மனதில் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த அறையில் இருந்த அறிவிற்  சிறந்த இளைஞர்களுடன் ஆர்வத்தைத் தூண்டும் உரையாடல் நடந்தது. பல விஷயங்களைப் பேசிய அவர்கள் ஒரு கட்டத்தில் மரண தண்டன

சுழற்பந்து

"வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒன்றுதான். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒரு சின்ன மாற்றம், ஒரு நிகழ்ச்சி நமது வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிடும். இதில் எனக்கு என்றும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. நான் சொல்கிறபடி நடந்தால் நமது இலக்கை நிச்சயமாக அடைய முடியும். இதுவரை நாம் ஏமாந்தது போதும். இந்த முறை நமது லட்சியத்தை அடைய யார் உதவுகிறேன் என்று உறுதி கூறுகிறார்களோ அவர்களையே நாம் வெற்றி பெறச் செய்வோம். என்ன சொல்றீங்க?'' என்று கேட்டு விட்டு பந்தை சிக்ஸருக்கு அடிப்பது போல் கிரிக்கெட் பேட்டை காற்றில் வீசிக் கொண்டிருந்தான் மதியழகன். அவன் பேசிக் கொண்டிருந்த விதமும் அதை சுற்றிலும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் புதிதாகப் பார்ப்பவர்களுக்கு ஏதோ புரட்சிகர சிந்தனை கொண்ட சில இளைஞர்கள் ரகசியக் கூட்டம் நடத்துவது போலத் தெரியும். கோவையில் இருந்து செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்கோ, புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தை வெடி வைத்துத் தகர்ப்பதற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள ஒரே வங்கியான வேளாண்மைக் கூட்டுறவு வங்கியைக் கொள