Thursday, October 28, 2010

எந்திரன் 'ஸ்' ஆன கதை


எந்திரனை பற்றி எல்லாரும் சலிக்கும் அளவுக்கு எழுதி விட்டார்கள். நான் மட்டும் புதுசா என்ன எழுதலாம் என்று யோசித்தேன். டெர்மினேட்டரை கேவலப்படுத்திய படம் அல்லது ஜெட்டிக்ஸ் டிவி பார்க்கும் போது ரஜினியின் முகத்தை மட்டும் நினைத்துக் கொண்டால் அதுதான் எந்திரன் படம்...வீடியோ கேம் படம்...இப்படி பல சிந்தனை.

என்னதான் இருந்தாலும் ரஜினி படத்தை தியேட்டரில் பார்ப்பது போல் வருமா?. நண்பர் ஒருவர் டிவிடி வேண்டுமா என்றார். நான் வேண்டாம் தியேட்டரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று கூறினேன்.

என்றைக்கு பாபா படத்தை முதல் ஷோ பார்த்தேனோ அன்றே முடிவு செய்தேன். ரஜினி படத்தை நிதானமாக ஒரு மாதம் கழித்துத்தான் பார்க்க வேண்டும் என்று எடுத்த முடிவு காரணமாக எந்திரனை கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் பார்க்க முடிந்தது.

கோவையில் மட்டும் 33 தியேட்டர்களில் படம் போட்டிருக்கிறார்கள். படம் வந்து 20 நாளுக்கு மேலாகிறது. எப்படியும் தியேட்டர் காத்து வாங்கும் என்று போனால் படம் போட்டுவிட்டார்கள். சரி சாந்தி தியேட்டருக்கு ஓடினால் அங்கேயும் படம் போட்டாச்சு. அட என்னடா நம்மள ரோபா ரேஞ்சுக்கு ஓட விட்டுட்டானுக என்று சிறிது நேரம் நின்றேன். மதிய காட்சிக்கு முன்பதிவு நடந்தது. அடச் சே இந்தப் படத்தப் போய் ரிசர்வ் செய்து பார்ப்பதா. நமக்குத் தெரிஞ்ச ரிசர்வேசன் எல்லாம் இந்தியன் ரயில்வே ரிசர்வேசன் தான். அதனால் வீடு வந்தேன்.

மறுபடியும் மதியம் 1.30க்கு கேஜி ஓடினால் ஹவுஸ்புல். சாந்திக்குப் போனால் ஒரே கூட்டம். ஆஹா எப்படியும் டிக்கெட் வாங்கிடலாம் என்று வெள்ளந்தியாக கியூவில் நின்றேன். பக்கத்தில் பெண்கள் கூட்டம். அதில் சூப்பர் ----நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வரிசையில் போனால் டிக்கெட் முடிஞ்சு போச்சு போயிட்டு அப்புறமா வாங்க என்று கவுண்ட்டர் பக்கத்தில் ஒருவன் கத்தினான். அடங்கொக்கமக்கா....ஞாயிற்றுக்கிழமை வந்தது தப்பா போச்சே என்று போஸ்டரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஐன்ஸ்டீன் மூளை வேலை செய்தது. வந்ததே வந்துட்டோம். வேற படமாவது பார்ப்போம் என்று என்னை தூண்டியது.

தூண்டியவர் மல்லிகா ஷெராவத். ஒரே காம்ப்ளெக்ஸில் இரண்டு தியேட்டர். ஒன்றில் ரோபா. மற்றொன்று ஸ்..ஸ்...ஸ்...கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு தொடை தெரிய பின்புலத்தில் பாம்பு படமெடுத்த சிலை இருக்க ஜிவ்வென்று தலை சுற்ற அத்தனை கூட்டமும் சாரதா தியேட்டர் கவுண்ட்டருக்கு மாறியது. எனக்கு முன்னால் தலை முழுவதும் நரைத்த பெரியவர் ஓடிவந்து கியூவை ஊடறுத்து நின்று கொண்டு என்னைப் பார்த்து நக்கல் சிர்ப்பு சிரித்தார். அட சொட்ட மண்டயா, நரச்ச தலையா, சுண்ணாம்புச் சட்டித் தலையா வயசானாலும் நாக்க சொழட்டாம இருக்க மாட்டயாடா...இதுல பெரிய கின்னஸ் சாதனை செய்த மாதிரி சிரிப்பு வேற என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

எங்களுக்கு இரண்டு டிக்கட் கொடுங்க என்று ஒரு பெண் கேட்டார். போமா அந்தப் பக்கம்..இது பொம்பளைங்க பார்க்கக் கூடாத படம். ஏ படம் என்று விரட்டினார். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது இது ஏ சர்டிபிகேட் என்று. அடச் சே இதெல்லாம் 20 வயசுல பார்க்க வேண்டியதாச்சே. இப்போ அதெல்லாம் தாண்டி போர்னோ அது இதுனு பார்த்து சலிச்சு ஆன்மிக லயத்தோட இருக்கும் போது இதெல்லாம் தேவையா என்று நினைத்தபடி உள்ளே போனால் ஹவுஸ்புல்.

படம் போட்டார்கள். 2 நாகங்கள். ஒன்று ஆண். மற்றது பெண். அதில் ஆணிடம் மாணிக்கக் கல் இருக்கிறது. அதை வெளிநாட்டுக்காரன் எடுத்து மருந்து தயாரிக்கப் பார்க்கிறான். அதனால் அதைக் கடத்துகிறான். அவனையும், அவனுக்கு உதவி செய்வோரையும் போட்டுத் தள்ள பெண் நாகம் வருகிறது. அதுதான் மல்லிகா ஷெராவத். படத்தில் அவருக்கு ஒரு வசனம் கூட கிடையாது. ஒவ்வொருவராக போட்டுத் தள்ளுகிறார் மல்லிகா. (அட...சாகடிக்கிறதைச் சொன்னேன்). அதைக் கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் இர்பான் கான் வருகிறார். கடைசியில் மல்லிகா எல்லோரையும் போட்டுவிட்டு (கொத்திவிட்டு) போகிறார்.

இந்தப் படத்தில் சொல்ல வேண்டியது கிராபிக்ஸ். ஆஹா ஓஹோ என்று சொல்லாவிட்டாலும்...எந்திரனுக்கு இது பரவாயில்லை. குறிப்பாக மல்லிகா பாம்பிலிருந்து பெண்ணாக உருவெடுக்கும்போதும். பெண்ணாக இருக்கும்போது பாம்பாக உருவெடுக்கும் போதும், பாம்பு சட்டை உரிக்கும்போதும் நன்றாக செய்துள்ளார்கள். பெண்ணாக உருவெடுத்தபின் துணி இல்லாமல் இருக்கிறார். அதை லாங் ஷாட்டில் காட்டுகிறார்கள். அதைப் பார்த்தால் எந்த விரசமும் இல்லை. அதுக்கு பேசாமல் ஷகிலா படம் பார்த்திருக்கலாம். இந்தப் படத்தில் அது போன்ற காட்சிக்காக ஏ கொடுத்திருக்கிறார்கள். இதையே கொஞ்சம் டீசென்ட்டாக எடுத்திருந்தால் அதாவது ரம்யா கிருஷ்ணன் போன்றவர்களை நடிக்க வைத்திருந்தால் படம் பெண்கள் மத்தியில் ஹிட்டாகி இருக்கும்.

படம் முடிந்து வெளியே வரும்போது ....ஸ்ஸ்ஸ் அப்பப்பா இதெல்லாம் ஒரு படமா...ஒரு சீனு கூட இல்லை ....ஸ்ஸ்ஸ் என்ற குரல் கேட்டது. யார் என்று திரும்பினால் அதே சுண்ணாம்புச் சட்டித் தலையன்.

Wednesday, September 29, 2010

ஆஸ்கர்: அங்காடித் தெருவை பீப்லி லைவ் தள்ளியது ஏன்?இந்தித் திரைப்படங்களை அதிகம் பார்ப்பது இல்லை. ஆனால் ஒரு சில நல்ல படங்கள் வரும்போதும் விருதுகள் பெறும்போதும் அதைப் பார்த்ததுண்டு.அதில் பா, 3 இடியட்ஸ் போன்ற நல்ல படங்கள். இந்தி திரையுலகில் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக ஆமிர்கான் இருக்கிறார். அவரது தயாரிப்பில் வந்திருக்கிறது பீப்லி லைவ் என்ற படம்.

பளீரென்ற காமிரா கிடையாது. வண்ண வண்ண குட்டிக் குட்டிப் பாவாடைகள் அணிந்து வரும் ஹீரோயின் கிடையாது. மார்புக் கச்சை கீழிறங்க கவர்ச்சி ஆட்டம் போடும் பாடல்கள் கிடையாது. பறந்து பறந்து அருவியில் குதித்தபடி சண்டைக் காட்சி கிடையாது. இப்படி நிறைய கிடையாதுக்கள்.

ஒரு வரியில் சொல்வதென்றால் விவசாயிகள் தற்கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

அண்ணன், விவரமில்லாத தம்பி. இருவரும் விவசாயிகள். தம்பிக்கு மனைவி, 3 குழந்தைகள். படுக்கையில் கிடந்து எந்நேரமும் கத்திக் கொண்டிருக்கும் வயதான அம்மா, அழகில்லாத கிராமம். விவசாயத்தை தவிர ஒன்றும் தெரியாத ஊர். மழையில்லை. கடன் அதிகமானது. வறுமை தாண்டவமாடியது. விளைவு நிலத்தை விற்க வேண்டிய நிலை.

உள்ளூர் அரசியல்வாதியிடம் உதவி கேட்கிறார்கள். வங்கியில் கடன் வாங்கத் தெரிந்தது அல்லவா? போய் அவர்களிடமே கேள். உன் நிலத்தை காப்பார்கள் என்கிறார். அப்போது தற்கொலை செய்தால் அரசாங்கம் ஒரு லட்சம் தருவதாகக் கூறுகிறார் அந்த அரசியல்வியாதி.

அதைப் பற்றிப் பேசிக் கொண்டே வீடு வருகிறார்கள்.  நடந்து நடந்து நடந்து காடு, மேடெல்லாம் கடந்து வீடு வரும் போது இரவாகிவிடுகிறது. இதில் ஒளிப்பதிவின் மாயாஜாலம் அருமை. கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் குறைந்து வீட்டுக்குள் வரும்போது ஒன்றுமே தெரியாது. விவசாயிகளின் நிலையும் அதுதான்.  வெளிச்சத்திலிருந்து இருளுக்கு. (அந்தளவுக்கு ஒளி குறைவு. இயற்கை வெளிச்சம் மட்டுமே வைத்து படம் எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.)

மனைவியோ கடும் கோபத்தில் அடிக்கிறாள் கணவனை. விவசாயிகள் தற்கொலை செய்தால் ஒரு லட்சம். அண்ணன், தம்பி பேசி முடிவெடுக்கிறார்கள். தம்பி தற்கொலை செய்வதாக முடிவாகிறது. இதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை உள்ளூர் பத்திரிகை நிருபர் கேட்கிறார். விஷயம் வெளியே வருகிறது. பிறகென்ன நாட்டின் முக்கிய தொலைக் காட்சிகளில் செய்தி வெளியாகிறது. பரபரப்பாகிறது.

வீட்டின் முன் குவிகிறது ஒட்டுமொத்த மீடியாவும். ஒவ்வொரு நிருபரும் மைக்கை வைத்துக் கொண்டு காட்டுக் கத்தல் கத்துகிறார்கள். நாதா தற்கொலை செய்வார் என்கிறது ஒரு சேனல். இல்லை என்கிறது மற்றொன்று.

விவசாய அமைச்சராக நஷ்ருதீன் ஷா.விவசாயிகள் தற்கொலை சொந்தப் பிரச்னையால் ஏற்பட்டது என்று பேட்டி கொடுக்கிறார்.
 
அரசியல்வாதிகள் தங்கள் பங்குக்கு குட்டையை குழப்புகிறார்கள். உள்ளூர் சாதிக் கட்சித் தலைவர்கள் அதற்கு மேல். மீடியாக்கள் சூடான செய்தி ஒன்று வேண்டும். அதையும் தாங்கள் மட்டுமே முதலில் தர வேண்டும் என்ற வேகம். அதிகாரிகள் கூட்டம் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது. தாங்களாகவே உள்நுழைய முடியாது. உயர்நீதிமன்ற உத்தரவு வரவேண்டும் என்கிறார் வேளாண் அமைச்சக செயலாளர். இப்படி அதிகாரவர்க்கம்-அரசியல்-ஊடகம் என்று மும்முனைத் தாக்குதலில் விவசாயி சிக்கி சீரழிகிறான். கடைசியில் எதிர்பாராத திருப்பத்துடன் கதை முடிகிறது.

இதில் ஊடகத்தை கிழி கிழியென்று கிழித்திருக்கிறார்கள். முக்கியமாக 24 மணி நேர செய்திச் சேனல்களை. வீட்டைச் சுற்றிலும் மீடியாக்கள், போலீஸ் படை. வெளியே எங்கே சென்றாலும் கேள்வி கேட்கிறது போலீஸ். அதனால் அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் கையில் தண்ணீர் வாளியுடன் வயல் பக்கம் ஒதுங்குகிறார் நாதா. அதையும் படம்பிடிக்கிறது ஒரு சேனல். திடீரென்று காணாமல் போகிறார் அவர்.

உடனே தொலைக்காட்சி நிருபரே புலன் விசாரணையில் இறங்குகிறார். நாதா இங்குதான் மலம் கழித்தார். இதோ கடைசியாக இங்குதான் உட்கார்ந்திருக்கிறார். தண்ணீர் பாருங்கள் எப்படிப் போயிருக்கிறது என்று விளக்குகிறார். மீடியாவை இதைவிட கூர்மையாக விமர்சிக்க முடியாது. அந்த வகையில் பீப்லி லைவ் சூப்பர்ப்.

கிராமத்தின் ஓரிடத்தில் எலும்பும் தோலுமான ஒரு விவசாயி தனியே கிணறு வெட்டிக் கொண்டிருக்கிறார். இத்தனை களேபரங்களுக்கிடையில் அவருக்கு என்ன குறை என்று யாரும் பார்ப்பதில்லை. தற்கொலை செய்கிறேன் என்று கூறிய ஒரே காரணத்துக்காக நாட்டின் கவனமெல்லாம் நாதா மேல்தான் இருக்கிறது. அவருக்குள்ள கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் அத்தனை விவசாயிகளுக்கும் உண்டு என்பதை யாரும் சிந்திக்கிவில்லை. ஆனால் உள்ளூர் நிருபர் மட்டும் மனதில் நெருடலோடு இருக்கிறார். திடீரென்று அந்த வயதான விவசாயி தான் வெட்டிய குழியிலேயே இறந்து கிடக்கிறார். பட்டினியால் செத்துவிட்டதாகக் கூறுகிறார்கள். மனம் கனத்து இருக்கிறான் நிருபன்.

இதை எல்லாம் விட்டுவிட்டு ஏன் நாதா பின்னாடியே நாம் அலையவேண்டும் என்று டிவி பெண் நிருபர் மலைக்கா ஷெனாயிடம் கேட்கிறான். அது நமது வேலையில்லை என்கிறாள். நமது வேலை பிரச்னைக்குத் தீர்வு காண்பதல்ல. ஒரு செய்தியின் துவக்கம் முதல் முடிவு வரை பின் தொடர்வதுதான் என்கிறாள். இதையெல்லாம் பார்த்து மனம் வருத்தம் அடைந்து தீர்வு காண முயன்றால் நீ தவறான தொழிலில் இருக்கிறாய் என்று அர்த்தம் என்கிறாள். ஒட்டுமொத்த மீடியாவின் தாரக மந்திரமே அதுதான்.

இத்தனைக்கும் காரணம் பீப்லியில் இடைத்தேர்தல் நடைபெறப் போகிறது. அதனால் அரசியல்வாதி-ஊடகம் ஆகியவற்றின் கவனம் பெறுகிறது. அதுவும் இல்லாவிட்டால் இந்திய விவசாயிக்கு எந்த நாதியும் இல்லை.

நாதாவின் நிலையைக் கண்டு கருத்துக் கணிப்பு எடுப்பது, ஊர்வலம் போவது, பல்கலைக்கழக மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் நாட்டைப் பற்றிக் கவலை கொண்டு உட்கார்ந்திருப்பது. பிறகு இரவில் பார்ட்டிக்குப் போவது என்று எல்லா அபத்தங்களையும் விமர்சிக்கும் படம் இது.

இப்படி ஒரு படம் துணிச்சலுடன் எடுத்ததற்காகவே ஆமிர்கானுக்கு ஆஸ்கர் தர வேண்டும்.

அங்காடித் தெருவுக்கும், பீப்லி லைவ்வுக்கும் கடைசி நேரப் போட்டி. அதில் பீப்லி லைவ் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அங்காடித் தெருவுக்கு ஏன் ஆஸ்கர் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதை விளக்க வேண்டுமா?

நாம் இன்னும் அரிவாள், பஞ்ச் டயலாக், காதல் கத்திரிக்காய், குடும்பக் கதை இதைவிட்டு வெளியே வரவில்லையே. சமுதாயப் பிரச்னை பற்றி படம் எடுத்தாலும் காதல், குத்தாட்டம் என்று இல்லாமல் படம் எடுப்பதும் இல்லை.

தமிழில் பீப்லி லைவ் போல படம் எப்போதும் வராது.

Thursday, September 16, 2010

அட... ஜூனியர் விகடனில் என்னோட பதிவு!


இன்று காலையில் நண்பர் வெங்கட் செல்பேசியில் அழைத்தார். கொஞ்சம் வேலையாக இருந்ததால் அழைப்பை எடுக்கவில்லை. (வேறன்ன...தூக்கம் தான்) 

 பிறகு மதியம் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் வேலையைத் துவங்கும்  முன் (மறுபடியும் தூக்கம்) மிஸ்டு கால் விட்டேன். உடனே லைனில் வந்தவர்...உங்க பதிவு ஜுனியர் விகடனில் வந்திருக்கிறது என்றார்.

ஏப்ரல், மே, ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆயிடுச்சே...இனி அடுத்த ஏப்ரல் 1 வருவதற்கு 6 மாதத்துக்கு மேல இருக்கே. ஒரு வேளை அட்வான்ஸா ஏப்ரல் ஃபூல் பண்றாரோ என்று நினைத்துக் கொண்டு அப்படியா...சரி பார்க்கிறேன் என்றேன். பிறகு நல்லா பாருங்க...விகடன் குட் பிளாக்ஸில் வந்திருக்கப் போவுது என்றேன். அவர் ஜூ.வி. வாசகர். அதனால் அடித்துக் கூறினார். கையிலேயே ஜூ.வி. வைத்திருப்பார் போலிருந்தது.

தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா பற்றி நீங்கள் போட்ட பதிவை அப்படியே போட்டிருக்காங்க. அதே படம். என்றார். ஆஹா...பதிவு போட நல்ல மேட்டர் சிக்கிருச்சு என்று ஆர்வத்தோடு ஜூ.வி. வாங்க  பெட்டிக் கடைக்கு ஓடினேன். பக்கத்தில் டாஸ்மாக். வேக வேகமாக ஜூ.வி.யை வாங்கி கைகள் நடுநடுங்க பிரித்துப் பார்த்தேன். (எவனாவது பார்த்திருந்தால் சரக்கு அடிச்சிட்டு சைட் டிஷ்ஷுக்கு ஜூ.வி. சினிமாவைத் தேடுகிறேன் என்று நினைத்திருப்பான்) அட ஆமா நம்ம பதிவுதான் என்று சந்தோஷம் அடி நெஞ்சிலிருந்து கிளம்பி அப்படியே உச்சியைத் தொடுவதற்குள்... புஸ்ஸ்ஸ்ஸஸ்ஸ்...... மேட்டர் மாறிப்பூடுச்சு...

அங்கதான் கதையில ஒரு ட்விஸ்ட்டு.....நான் எழுதிய பதிவை அப்படியே போடவில்லை. விஷயத்தோடுதான் எழுதியிருக்கிறார்கள். விவரமாகவும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் கொஞ்சூண்டு மூளையை வைத்துக் கொண்டு (உடம்பு மட்டும் ரொம்ப பெரிசாக்கும்...) காட் பாதர்-2 அல் பேசினோ போலவும்...கோஸ்ட் ரைட்டர் ரோமன் பொலான்ஸ்கி போலவும் செயல்பட நினைக்கும் எனக்கு ஒரு துப்பும் கொடுத்திருக்கிறார்கள்.  நான் வைத்த பதிவின் தலைப்பை அப்படியே...சாரி கொஞ்சம் மாற்றி வைத்திருக்கிறார்கள். (எப்புடி பாயிண்ட்ட புடிச்சம்ல பாஸு...).

இருந்தாலும் பரவாயில்லை. நம்ம பதிவுகளைக் கூட விகடன் குரூப்பில் பாலோ செய்கிறார்கள் என்பதை நினைத்தால் பெருமையாகவும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. (நம்ம பதிவெல்லாம் படிக்கிறாங்கன்னா இதுக்கு பின்னாடி என்னவோ பெரிய சதி இருக்குது)  

அதாவது நான் வைத்த தலைப்பு சும்மாவே இருக்க மாட்டாரா ஜேக்கப் ஜுமா. (கிளிக் செய்து படிங்க) ஜூ.வி.யில் வந்ததோ சும்மாவே இருக்கமாட்டார் சுமா. எப்பூடி....படம் கூட நம்ம பதிவில் இருப்பதுதான். (நீ என்ன ஜுமா வீட்டுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிட்டு போயி எடுத்தியா...கூகுளில் ஆட்டயப் போட்டதுதானே) இது இரண்டுக்கும் 6 வித்தியாசம் எல்லாம் இல்லை. ஏனென்றால் இது குமுதம் இல்லை. ஹிஹி.

நம்ம என்னதான் நல்லா பதிவு போட்டாலும் விகடனில் வராது என்றிருந்தேன். முடிஞ்சவரை கடைசி முயற்சியாக நானும் ரவுடிதான் சார் என்று ஜீப்பில் ஏறலாம் என்று கூட நினைத்தேன். அப்புறம் மனசாட்சி (பார்றா..) இடம் கொடுக்காததால் அந்த திட்டத்தை கைவிட்டேன். (மறுபடியும் பார்றா...) எப்படியோ விகடன் பிளாக்ஸில் நம்ம பிளாக்கை பிளாக் பண்ணி வைத்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் பரவாயில்லை.

பேரு வருது வரல அது பற்றி நமக்கென்னங்க கவலை. எப்படியோ நாம எழுதினது நாலு பேரு படிச்சு மண்டய சொறிஞ்சா அது போதும். நாம எழுதினது நல்லா ரீச் ஆகுதுங்கறது நிரூபணம் ஆயிடுச்சு... 

அதனால நாங்களும் ரவுடிதான் சார்...வர்ட்டா...

Monday, September 13, 2010

ரஜினியின் ராஜதந்திரம்!முதலில் சொல்ல வேண்டிய விஷயத்தை கடைசியில் சொன்னால் அப்புறம் முதலில் என்னைப் பற்றி தவறாக நினைத்துவிட்டு கடைசியில் அடடே இவன் அப்படி இல்லை போல இருக்கிறது என்று முதலில் நினைத்ததற்கு எதிராக கடைசியில் நீங்கள் நினைக்கக் கூடும்.

புரிந்ததா. இது தான் ரஜினி. பாட்ஷா படம் வந்தபோதுதான் ரஜினியை மிகப் பிடித்துப் போனது. அன்றிலிருந்து அவர் நடித்த படம் எப்படி மொக்கை போட்டாலும் ஒரு வரலாற்றுக் காவியம் போல பார்த்திருக்கிறேன். அது சிவாஜி வரை தொடர்ந்தது. எந்திரன் படத்தில் கதை மட்டும் சிவாஜி மாதிரி டம்மி பீஸாக இருந்தது என்றால் படம் ஊத்திக்கும். தினமும் ஒரு முறையாவது எப்எம்மில் பாட்டுப் போடுகிறார்கள். வழக்கமாக ரஜினி படத்தில் பாடல்கள் எல்லாம் புரியம் படி தெளிவாக இருக்கும்.  எந்திரன் பாடலில் ஒன்னுகூட மனதில் ஒட்ட மாட்டேன்கிறது. சந்திரமுகியில் கூட நன்றாக இருந்தது. ரஜினிக்கு எதிராக சதி செய்ய ரஜினியுடன் கூடவே கவிஞர்கள் இருக்கிறார்கள் போலிருக்கிறது.

நான் ரஜினி ரசிகன், கமல் ரசிகன். அல்லது யாருக்கும் ரசிகன் அல்ல. நல்ல சினிமாக்களை விரும்பிப் பார்க்கும் ரசிகன். உலக சினிமா ரசிகன் என்று வையுங்களேன்.

ரஜினியின் இரண்டாவது மகள் திருமணத்துக்கு முதலில் ஜெயலலிதாவை நேரில் சென்று அழைத்தார்கள். பிறகு முதல்வர் முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியை நேரில் அழைத்தார்கள். தமிழ்நாட்டு ஈழப் போராளி திருமாவளவனைக் கூட விட்டுவைக்காமல் அழைத்தார் ரஜினி. உண்மையில் அரசியல் நாகரிகம் தெரிந்தவர் ரஜினி என்றே இந்த செயல்கள் அவரை உயர்த்தின.


அதே நேரம் அடுத்து ஆட்சிக்கு வந்த பின்னர் பழசெல்லாம் ஞாபகம் வச்சு நீ எம்மேல ஊத்துனாலும் ஊத்தீருவ என்று அமைதிப்படையில் சத்தியராஜ் சொல்வது போல ஜெயலலிதா நடந்து கொண்டால் என்ன செய்வது என்ற பயத்தில் அவருக்கு முதலில் பத்திரிகை வைத்தார் என்று கூறுவோரை ரஜினியின் பரம வைரியாகவே பார்க்கிறேன். (கலைஞர் வந்தார். ஜெயலலிதா வரவில்லை.. ஏன்?)ஆனால் திருமணத்துக்கு 2 நாள் முன்னாடி ஒரு அறிக்கை விட்டு ரசிகனின் கன்னத்தில் விட்டார் பாருங்க ஒரு அறை. அது தான் ரஜினியின் ராஜதந்திரம். எல்லோரையும் அழைத்தாகிவிட்டது. ரசிகர்களை அழைக்கவில்லை என்றால் எந்திரன் படம் என்னாவது...அரசியல் பூச்சாண்டி அஸ்தமனம் ஆகி விடுமே..கோடிகளை சம்பாதிக்க முடியாதே...என்று நினைத்திருப்பார் என்று தப்பு தப்பாக நீங்கள் நினைப்பது போல் அவர் நினைக்கவில்லை.


அதனால் ரசிக மகாஜனங்களே உங்களை எல்லாம் அழைத்து விருந்து போட்டு என் மகள் திருமணத்தை கண் குளிர காண வேண்டும் என்று ஆசைதான். ஆனால் சென்னையில் இட வசதி இல்லை. போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். அதனால் வீட்டிலேயே சோற்றை தின்றுவிட்டு உங்க அப்பா அம்மாவை காப்பாற்றுங்கள் என்ற ரீதியில் அறிக்கை விட்டார் ரஜினி. அதவாது ரசிகர்களை மறக்கவில்லை. திருமணத்துக்கு அழைக்காமல் விட்டுவிட்டார் என்று யாரும் நினைக்கக் கூடாது. அதே நேரம் அழைத்தது போல் இருக்க வேண்டும். அப்போதுதான் ரஜினியின் ராஜதந்திரம் வேலை செய்தது.

உங்களை அழைக்க ஆசைதான். இருந்தாலும் நெருக்கடி ஏற்பட்டுவிடும். அதனால் உங்கள் ஆசியை மட்டும் உங்க வீட்டிலிருந்தே கொடுங்க அது போதும் என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட ரசிக மகாஜனங்கள் புளகாங்கிதம் அடைந்து எந்திரன் ரிலீஸ் எப்போ என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

இது எப்டி இருக்கு?


Tuesday, September 7, 2010

சும்மாவே இருக்கமாட்டாரா ஜேக்கப் ஜுமா?ஜேக்கப் ஜுமா. தென்னாப்பிரிக்காவின் அதிபர். 1990-களில் தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் இணைந்த கட்சிப் பணியாற்றினார். எத்தனை நாளுக்குத்தான் பொதுநலம் பேசுவது என்று நினைத்திருப்பார் போல...உடனே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். (அவருடன் எத்தனை பேர் காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை.)

காங்கிரஸின் தலைவராக இருந்த தபோ மெபிகியை தள்ளிவிட்டுவிட்டு 2007-ல் அதன் தலைவரானார். அப்படியே தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துவிட்டார். இப்போது அதிபர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பொதுவாழ்க்கையில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் கில்லாடியான ஆள்தான் ஜுமா.


ஊழல் வழக்கு அவர் மீது இருந்தது போலவே 31 வயது காங்கிரஸ் உறுப்பினரான எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பெண்ண கற்பழித்தாக வழக்கு நடந்தது. அப்புறம் எப்போதும் போல அரசியல்வாதியே வெற்றி பெற்றார்.

வாலி படத்தில் விவேக் சொல்வது போல ஏற்கெனவே கல்யாணமாயி 2 குழந்தைகடா...அப்புறமா ஒரு கல்யாணம் வேற ஆயிருச்சு என்பாரே...அது போல ஏற்கெனவே 5 மனைவிகள். அவர்களுக்கு 20 குழந்தைகள்.
2007-ல் குடும்ப நண்பரின் மகள் மீது கை வைத்து விட்டார் இந்த ஜகதலப்பிரதாபன். விளைவு நெம்பர் 20க்கு தந்தை ஆகிவிட்டார். கடைசியாக ஜனவரி 2010-ல் தொபேக்கா ஸ்டேசி மடிபா என்ற மனைவிக்கு குழந்தை பிறந்தது. அது நெம்பர் 21.


அத்தோடு சும்மா இருந்தாரா ஜுமா...ஹும்..அதான் கிடையாதே..ஆளப் பாத்தா இன்னும் 10 கல்யாணம் பண்ணுவார் போலிருக்கிறது.

மறுபடியும் ஒரு பெண்ணை காதலிக்கிறார். நல்லா கவனியுங்கள் மக்களே ஐயாவுக்கு வயது 68. சக்கர நாற்காலி எல்லாம் கிடையாது. ஆட்டத்தைப் பார்த்தீங்கல்ல...


தெரிஞ்ச வூடு தெரியாத வூடு என்று எங்குவேண்டுமானாலும் பால் குடிக்கும் பழக்கம் உடைய ஜுமா பூனை ஒரு பெண்ணை காதலித்தால் சும்மா இருக்குமா? விளைவு நெம்பர் 22 ரெடியாகிவிட்டது.

இதெல்லாம் இருக்கட்டும். 5 மனைவிகள், ஒரு காதலி, 21 குழந்தைகளுக்கு அவர் செய்யும் செலவு ஆண்டுக்கு ரூ.6.5 கோடியாம்... அவர் பணமா இல்லை அரசாங்கப் பணமா என்று தெரியவில்லை.

போங்கிவெ குளோரியா நெமா என்ற அந்தப் பெண் ஜுமா மூலம் தாயாகிவிட்டார். அடுத்த ஜனவரியில் அவருக்கு குழந்தை பிறக்குமாம். இது எப்பூடி...சும்மா இருக்கமாட்டாரோ ஜுமா.


யோவ்...உலகத்துல இப்படி எல்லாம் நடந்துட்டு இருக்குது... அதை விட்டுட்டு குடும்ப அரசியல், மகன்,மகள், பேரன்களுக்கு பதவி கொடுக்கிறார் என்று எங்களைச் சொல்றீங்களே...

(யாரங்கே...யார்றா அங்கே.. எவன் அவன் கொரலு கொடுக்குறது...)

Saturday, September 4, 2010

கலைஞர், சோனா, சில அபத்தமான கேள்விகள்


50 ஆண்டுகளாக வெற்றி தோல்வி என்று கட்சிக்கு எது நேர்ந்தாலும், எவர் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தாலும், தலைவர்களுக்கு கொள்கை இல்லாவிட்டாலும் தனக்கு கொள்கை உண்டு என்று உறுதியுடன் திமுகவிலேயே குப்பை கொட்டும் ஏழைத் தொண்டனுக்கு கிடைக்குமா இந்த அரிய வாய்ப்பு?

இந்தப் படத்தைப் பார்த்தால் நடிகை சோனா ஏதோ நிவாரண நிதி கொடுத்திருப்பார் போல் இருக்கிறது. இருக்கட்டும் பரவாயில்லை.  நிதியைக் கொண்டு வந்தால் கலைஞர் வாழ்க என்று மாநாடு, பொதுக்கூட்டம் என அனைத்திலும் எங்கேயோ ஒரு மூலையில் நின்று தொண்டை கிழிய கோஷமிடும் தொண்டருக்கும் இதே போல் மரியாதை தருவீர்களா?

திரைத் துறையில் இருந்து வந்தேன் என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு ஓடாத படத்தில் தலையை  மட்டும் காட்டிவிட்டு (நடிகை என்றால் வேறு என யாரும் கற்பனை செய்யாதீர்) யார் வந்தாலும் அவர்களை பிரதமர், கட்சித் தலைவர்கள் என்று எல்லோரும் அமர்ந்து பேசிச் செல்லும் அதே இடத்தில் உட்கார வைத்து இது போல் பேசுவீர்களா?

அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கலைஞரின் பேச்சால் கவரப்பட்டு திராவிடப் பாரம்பரியத்தில் வளர்ந்து வாழ்வைத் தொலைத்துவிட்டு எங்கோ கிடக்கும் பழைய தொண்டர்களுக்கும் இப்படி தலைவன் அருகில் அமர்ந்து பேசக் கிடைக்குமா ஒரு முத்தான வாய்ப்பு?

கட்சிக்காக கலைஞருக்காக உழைத்து உருகிப் போனவர்களுக்குக் கிடைக்குமா இந்த அன்பான பார்வை, அனுசரணையான சிரிப்பு?

சோனா என்ற நடிகை எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழச்சி கிடையாது என்பது நிஜம். கொத்துக் கொத்தாய் செத்துப்போன தமிழர்களுக்காய் உயிராயுதம் ஏந்தி கருகிப்போனவர்களின் குடும்பத்திற்கு இவருக்கு கிடைத்தது போல் கிடைக்குமா ஆதரவான இருக்கை?


கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் கலைஞர் முதல்வராக வேண்டும் என்று கொடி கட்டிய, போஸ்டர் ஒட்டிய, பிரசாரத்துக்கு அல்லும் பகலும் உழைத்த, ஓட்டுப் போட்ட கைகளுக்கு இப்படி உங்கள் கையை ஒதுக்கிவிட்டு இருக்கையின் மேல் கை வைத்து உட்கார கிடைக்குமா ஒரு வாய்ப்பு?

தலைவர் வருகிறார், தரணி போற்றப் பேசுகிறார் என்பதற்காக கால் கடுக்க நின்று வழியெங்கும் மொட்டை வெயிலில் கரம் கோர்த்து நிற்கும் மகளிருக்குக் கிடைக்குமா இந்த பாக்கியம்?

சுதந்திரம் கேட்டது ஒரு தவறா, ஏன் அடிக்கிறாய், கொல்கிறாய் என்று  எதிர்த்தது தவறா, இதைத் தட்டிக் கேட்டவரின் தாய்க்கு இப்படி ஒரு இருக்கை கிடைக்குமா? ஆதரவான பார்வை கிடைக்குமா?

சினிமா பார்க்க மட்டுமே தெரிந்த, கழுத்து துவங்கி முதுகெலும்பு முடிவு வரை அனைத்தும் தெரியும் அளவுக்கு ஜாக்கெட் போட்டு தொலைக்காட்சியில் ஷோ காட்டத் தெரியாத, கல் உடைத்துக் கஞ்சி குடிக்கும் கருத்த மேனி கொண்டு வற்றிய கன்னத்தோடு வாழ்வைக் கடந்து கொண்டிருக்கும் ஏழை ஏந்திழையாளுக்கு எப்போது கிடைக்கும் இப்படி ஒரு நல் வாய்ப்பு?

கேள்விகள் ஏராளம்...தாராளம்...

Friday, September 3, 2010

உங்களுக்கு இப்படி நடந்திருக்கிறதா?மனிதனின் மனம் விசித்தரம் நிறைந்தது. சிறிய விஷயங்களுக்கு பெரிய களேபரமே நடத்தும். ஆனால் மிகப் பெரிய விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடும். அது நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

உதாரணத்திற்கு, பஸ்ஸில் கூட்ட நெரிசலில் தெரியாமல் நம் காலை யாரும்  மிதித்துவிட்டால் கோபம் மூக்கு நுனியில் இருந்து கிளம்பி கபாலம் வழியாக உச்சி முடியில் ஏறி நட்டுக் கொண்டு நிற்கும். பிறகு எதிராளியின் பலம்/பலவீனம் பொருத்து நம் ரியாக்சன் இருக்கும்.

ஆனால் தேடி வந்து சனியன் பனியனுக்குள் சென்றால் கூட கண்டு கொள்ளாமல் ஹிஹி பரவாயில்லைங்க..என்று விட்டுவிடும். அது போல் மனித மனத்தின் கனவுகளும் விசித்திரம் நிறைந்தவை தான்.

எண்ணற்ற மனிதர்கள் கனவுகளில் நடப்பதை ஏற்கெனவே நடந்ததாகவோ அல்லது பின்னர் நடந்தது என்றோ கூறக் கேட்டிருக்கிறோம். இது போல் எனக்கும் நடந்த அனுபவம் உண்டு.

10 வருடங்கள் முன்பு எனது நண்பரின் தாய் உடல் நலக் குறைவு காரணமாக கோவையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். தினமும் கேஜி மருத்துவமனைக்கு வந்து பார்த்துவிட்டு மருதமலை செல்வார். அப்போது நான் ஈரோடு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் அவர் அம்மாவைப் பார்க்கச் செல்லவில்லை. அல்லது அப்போது தோன்றவில்லை.

அப்போது ஒரு நாள் அதிகாலையில் வந்த கனவில் அவரது தாய் இறந்து போலவும், அவர் அப்பா வேதனை தாங்காமல் மது குடிப்பது போலவும் கனவு கண்டேன். பிறகு அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்று நினைத்து விட்டு மறந்தேன். இரண்டு நாட்கள் கழித்து the mask of zorro படத்தை ஈரோட்டில் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். அப்போது நண்பரின் தாய் இறந்துவிட்ட செய்தி கிடைத்தது. அதிர்ந்து போனேன்.

கனவில் வந்தது நடந்து விட்டதே என்று வருத்தப்பட்டேன். பிறகு ஒரு 5 வருடம் கழித்து இதை என் நண்பரிடம் கூறினேன். அவர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். வேறென்ன செய்ய முடியும். ஆனால் அவர் தந்தை மது குடிக்கவெல்லாம் இல்லை. ஏனெனில் அவருக்கு அந்தப ்பழக்கம் இல்லை.

அடுத்து...

மற்றொரு பள்ளி நண்பர். அவருடைய அப்பா மளிகைக் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடைக்கு எப்போதாவது போவேன் (அதாவது 6 மாதத்துக்கு ஒருமுறை). என்னை அடையாளம் தெரிந்தாலும் பெரிதாக அவரிடம் பழக்கமில்லை.  வயதாகிவிட்டதால் ஒரு மாதத்துக்கு முன் அவர் கீழே விழுந்துவிட்டார். இதனால் உடல் நலம் மோசமாகி வீட்டில் படுக்கையில் இருந்துள்ளார்.  இந்தத் தகவல் எனக்குக் கூறினார்கள். பின்னர் இதை மறந்து விட்டேன்.

கடந்த வாரம் கனவில் அவர் எங்கோ ஓர் அறையில் இருந்து வெளியே வருவது போலவும் என் முன்னே வந்து ஏதோ பேசிவிட்டுச் செல்வதும் போலவும் ஒரு கனவு வந்தது. (நாம் நன்கு பழகிய, மற்றவர்கள் மேல் நாம் அன்பு செலுத்தும் நபர் கனவில் வந்தால் அது வேறு கதை.) ஆனால் இவரிடம் பேசியது கூட மொத்தமே ஒரு 10 வரிகள்தான் இருக்கும். அப்படியிருக்க அவர் கனவில் வந்து சென்றார்.

பிறகு அலுவலகம் வந்து விட்டேன். இரண்டு நாட்கள் கழித்து அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. எனக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும், அச்சமாகவும் ஆகிவிட்டது.

கனவுகள் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இதை இஎஸ்பி பவர் என்றும் கூறுகிறார்கள். எனக்கு ஏற்பட்டது அதுவா?. அப்படியானால் இது போல மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்குமா? இந்த இரு சம்பவங்களும் ஒன்றிணைத்துப் பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் இது போன்று அடிக்கடி ஏற்படுவது இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இப்போது நடந்துள்ளது.


உங்களில் யாருக்காவது இப்படி நடந்திருக்கிறதா?


குறிப்பு: இன்செப்ஷன் படம் இன்னும் பார்க்கவில்லை...

Thursday, September 2, 2010

ரியல் ஹீரோ சூர்யாதான்!
சூர்யா, விஜய் யார் ரியல் ஹீரோ?  என்ற இந்தப் பதிவைப் படித்துவிட்டு நீ என்ன விஜய்யின் விரோதியா, சூர்யாவின் அபிமானியா என்று கேட்டு பின்னூட்டங்கள் வந்தன. அதில் நிர் என்ற அனானி எழுதிய பின்னூட்டம் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

//சூர்யா அனுதாபிகளின் கூப்பாடு. விஜய்யும்தான் 40 குழந்தைகளைப் படிக்க வைக்கிறார். உண்மையைத் தெரிந்து கொண்டு எழுது// என்று கூறியிருந்தார்.

முதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். நான் தமிழ் சினிமா ஹீரோக்கள் யாருக்கும் ரசிகன் இல்லை (சில நேரங்களில் மட்டும் கமல்). மைக்கேலேஞ்சலோ அன்டோனியோனி, மோஷேன் மக்பல்பாஃப் படங்களைத் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் எமிர் குஸ்ட்ரிகா  படங்கள் பெட்டியில் உட்கார்ந்து கொண்டு தினமும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. சராசரி ரசிக உள்ளம் நமக்குக் கிடையாது.

உண்மையில் இதுவரை சூர்யாவின் படங்களில் கஜினி, வாரணம் ஆயிரம் மட்டுமே பார்த்துள்ளேன். அதுவும் இயக்குநருக்காக. சிங்கம் சிடியில் பார்த்ததுதான். ரஜினி-கமல், அஜீத்-விஜய், விஜய்-சூர்யா என்ற இரட்டைத் தன்மையில் நான் விழுவதும் கிடையாது. (விஜய்யை விட சூர்யா நன்றாக நடிக்கிறார் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்)

விஜய் டிவியில் வந்த நிகழ்ச்சியை வைத்து நான் எழுதிய பதிவை சூர்யா படித்திருப்பாரா என்று தெரியாது. (ஆசையப் பாரு...) ஆனால் அந்தப் பதிவு எழுதிய இரு நாள்களுக்குப் பின் சென்னையில் நடந்த விழாவில் கஷ்டப்பட்டு படித்து முன்னேறும் மாணவர்கள்தான் உண்மையான ஹீரோ, நாங்கள் எல்லாம் வெறும் சினிமா ஹீரோக்கள்தான் என்று சூர்யா கூறினார்.

விஜய் படிக்க வைக்கிறார் உதவி செய்கிறார் என்பது மகிழ்ச்சியே. ஆனால் அதை சூர்யாவோடு ஒப்பிட முடியாது. சூர்யா செய்வது சத்தமில்லா சேவை. அனானி நீங்கள் சொல்வது போல விஜய் உதவி செய்கிறார். ஆனால் அதனால் கிடைக்கும் பெயர் தனக்கு மட்டுமே வர வேண்டும் என்பதைப் போல் தான் மட்டுமே செய்கிறார். ஆனால் சூர்யா அப்படியில்லை. அவர் தன்னோடு உதவ மனமும் வசதியும் உள்ளவர்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு குழுவாகச் செயல்படுகிறார். குழு மனப்பான்மை உள்ளவனே உயர்ந்தவன். 

வெறும் 40 பேருக்கு பணம் கொடுத்துவிட்டால் போதுமா. செய்த உதவி சரியான நபர்களுக்குப் போகிறதா, தன்னுடைய ரசிக குஞ்சு மன்றங்கள் கூறும் நபர்களுக்கு மட்டுமே போகிறதா என்பதை விஜய் மட்டுமல்ல ரசிகக் குஞ்சு நிர் என்ற அனானியும் விளக்கினால் பரவாயில்லை.

சூர்யாவுக்கு புகழ் சேர்க்கவோ அல்லது அவரை விளம்பரப்படுத்தவோ நான் என்ன அவர் பிஆர்ஓவா? சேவை செய்யும் ஒருவரைப் பாராட்டி நான்கு வரி எழுதினால் அதைப் படித்து மற்றவர்களும் பின்பற்றவோ அல்லது சூர்யாவின் அறக்கட்டளையில் இணைந்து  பணியாற்றவோ ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே அந்தப் பதிவை எழுதினேன்.

 //இப்படி சொல்லும் நீங்கள் சூர்யா 50 கோடி மதிப்பில் நிலம் வாங்கப் போகிறார். அதற்கு என்ன சொல்கிறீர்கள்// என்று கேட்டார். ஐயா...சாமி...யாருடாப்பா நீ...சூர்யா சம்பாதிக்கிறார், கார்த்தி சம்பாதிக்கிறார், சிவக்குமார் சம்பாதித்தார்..அவர்கள் கையில் காசு இருக்கு இல்லை..கடன் வாங்கி நிலம் வாங்குகிறார்கள்..எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் அது அவர்கள் சொந்த விஷயம். இது பற்றி இங்கு எதற்கு கேள்வி.

அடுத்தவர்களை மட்டம் தட்டாதீர்கள் என்று ஒரு வரி எழுதியிருக்கிறார். விஜய்யை மட்டம் தட்டவில்லை. சேவை செய்கிறேன் என்று இஸ்திரிப் பெட்டி கொடுத்துவிட்டு விளம்பரம் தேடி அதன் மூலம் ஆதாயம் தேட விரும்புவோரையே விமர்சித்தேன். விஜய்யும் சூர்யாபோல் தன்னலம் கருதாமல், மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டால் நல்ல விஷயம் தானே.

விஜய் மட்டுமல்ல..மற்ற நடிகர்கள் செய்யும் எல்லா சேவையிலும் தன்னலமே மேலோடி நிற்கிறது. அதை விளம்பரப்படுத்தி தனக்கு மட்டுமே பெயர் வர வேண்டும் என்று தான் மட்டுமே இவர்களை ரட்சிக்க வந்த தேவதூதன் போல் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் சூர்யா அப்படி செயல்படவில்லை. அவரை விட அதிகமாக பணம் கொடுத்தவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்பதையும், அவர்களையே அதிகமாகப் பேச வைத்தார்கள் என்பதையும் உணர வேண்டும். நிகழ்ச்சியின் இறுதிவரை நான், எனது என்பது போன்ற வார்த்தைகளை அவர் மிகக் கவனமாகத் தவிர்த்தார். எங்கள், நாம், நமது, உங்கள் என்றே கூறினார். இதையும் இங்கே கூற வேண்டும்.

இன்று சூர்யா செய்யும் செயல்களை பயன்படுத்திக் கொண்டு நாளை அரசியல் என்ற சுய நல நோக்கில் இறங்கினால் அப்போது அவரை விமர்சித்தும் எழுதுவேன்.

விஜய், தான் மட்டுமே தேரை இழுக்க வேண்டும் என நினைக்கிறார். சூர்யாவோ ஊரைக் கூட்டி அனைவரையும் தேரை இழுக்க வைக்கிறார். அதனால் சூர்யாதான் ரியல் ஹீரோ.

 இது போன்ற பின்னூட்டத்திற்கு பதில் எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நண்பர் நாஞ்சில் பிரதாப் கூறினார். இருந்தாலும் பதிவு போட மேட்டர் கிடைக்கலையே...அதனால எழுதிட்டேன்.

Monday, August 23, 2010

சூர்யா, விஜய்- யார் ரியல் ஹீரோ ?


காலங்கள் மாறினாலும் சினிமாவின் நிறம் மாறினாலும் எப்போதும் சில ஹீரோக்கள் எவர்கிரீனாக ரசிகர்களைக் கவர்ந்து கொண்டுதான் இருப்பார்கள். திரையில் பார்க்கும் ஹீரோ நிஜத்திலும் அப்படியே நாற்பது பேரை அடிப்பார், ரோட்டில் செல்லும் ஹீரோயினை வம்பு செய்து பாட்டுப் பாடுவார், அம்மாவின் மீது உயிரையே வைத்திருப்பார், சோற்றுக்கே வழியில்லாவிட்டாலும் தாராளமாக நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து சர்வ வல்லமை பொருந்திய வில்லனை, அரசியல்வாதியை அடித்து துவம்சம் செய்வார் என்று நம்பிக் கொண்டிருந்த காலம் இருந்தது.

இன்றும் அப்படி நம்பும் ரசிகர்கள் இருப்பதன் விளைவே கட்அவுட்டுக்கு பாலபிஷேகம், பீரபிஷேகம் செய்யும் நிகழ்வுகள். என்ன இருந்தாலும் எம்ஜிஆர் போல வராது என்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். திரையில் மட்டுமல்ல மக்கள் மனதிலும் இடம் பிடிப்பது சாதாரணம் இல்லை.

எம்ஜிஆர் விட்டுச் சென்ற அந்த இடத்தைப் பிடிப்பதற்கு எப்போதும் தமிழ் சினிமாவில் போட்டி உண்டு. பிறகு ரஜினி அந்த இடத்தைப் பிடித்தார். இப்போது விஜய் பிடித்து வைத்திருப்பதாக அவரது ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் சிவாஜியின் இடத்தையோ அல்லது கமலின் இடத்தையோ பிடிக்க விரும்புவதில்லை. காரணம், எல்லோரும் முதலிடத்தில் இருப்பதையே விரும்புகின்றனர்.

எம்ஜிஆருக்கு திரையில் இடம் பிடிக்க திறமை இருந்தது. அதை அப்படியே மக்கள் மனதிற்கு மாற்றி அதை வாக்குகளாக மாற்றும் சூழ்நிலையும் அமைந்தது. ரஜினியோ மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொண்டார். அல்லது பல புறக்காரணிகள் அவரை அரசியல் பக்கம் இழுப்பது போல் கொண்டு சென்று எப்போதும் ஒரு சென்ஷேசனாக வைத்திருத்தன.

அந்த வழியொற்றி விஜய்யும் ஒரு எம்ஜிஆராக மாறப் பார்த்தார். பார்க்கிறார். ஆனால் இன்றைய அரசியல், சமூகக் காரணிகள் வேறாகிவிட்டன. மக்கள் மனதில் இடம் பிடிப்பது சாதாரணம் இல்லை. அதே நேரம் ஒரு சில பொருளுதவிகள் செய்துவிட்டால் மக்கள் தம்மை ஏற்றுக் கொள்வார்கள் என நினைப்பது முட்டாள்தனம். அந்த உதவி சில காலங்களில் மறந்து விடும். ஆனால் வாழ்நாள் முழுவதும் நினைக்கும்படியான நற் செயல்கள் செய்பவரையே மக்கள் என்றென்றும் நினைத்திருப்பார்கள்.

திரையில் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் நிஜ வாழ்க்கையில் இருக்கும் யாரோ ஒருவனுக்கு சவால் விடுவதும், பஞ்ச் டயலாக் என்ற பெயரில் பஞ்சம் பிழைப்பது முதல் சில மாதங்களுக்கு முன் அரசியல் பிரவேசம் செய்யப் போகிறேன் என்று அறிவித்தது வரை விஜய் செய்யும் காமெடிகள் தமிழ் ரசிகர்கள் அறிந்ததுதான். வெறும் இஸ்திரிப் பெட்டியும், தையல் இயந்திரமும், ரத்த தான முகாமும், பிரியாணி விருந்தும் போட்டதோடு அல்லாமல் அதை படம் எடுத்து மாலை பத்திரிகைகளில் போட்டுக் கொண்டால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனம்.

இந்த இடத்தில் தான் நடிகர் சூர்யா ஒரு நாயகனாக எழுகிறார். உண்மையில் விஜய்க்குப் பின்னர் திரைப்படத்திற்கு வந்தவர். அவரது தந்தையின் நற்பெயருக்கு ஏற்ப நல்ல பெயருடன் இருப்பவர். அவரது தந்தையின் வழியில் இளம் தலைமுறையினருக்கு அவர் செய்யும் பணியே அவரை உண்மையான ஹீரோவாகக் காட்டுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக சிவக்குமார் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார். அதை அடியொற்றி தான் திரையுலகில் நல்ல இடத்தைப் பிடித்ததும் துவங்கினார் நடிகர் சூர்யா. அகரம் என்ற அறக்கட்டளையை உருவாக்கினார். அதை கடந்த பொங்கலின் போது உருவாக்கினார். அவர் உள்பட ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாயில் அந்த அறக்கட்டளை உருவானது. முதல் ஆண்டில் 158 ஏழை மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கு உதவி இருக்கிறார்கள். அந்த மாணவர்கள் அனைவரும் சமூகத்தின் ஏதோ ஒரு மூலையில் யார் உதவியும் இன்றி வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருந்தவர்கள்.

அவர்களுக்கு ஒரு லைஃப் போட்டாக இருந்து உதவுகிறது சூர்யாவின் அகரம் பவுண்டேசன். 

கைம்மாறு கருதாமல் இந்தச் சேவையை அவர் செய்வதோடு அல்லாமல் தனக்கு நெருங்கியவர்களையும் இதில் முழு மனதோடு ஈடுபட வைத்திருக்கிறார். மேலும் அவருக்கு அறிமுகமே இல்லாதவர்களையும் கூட இந்த அறக்கட்டளையில் ஈடுபடவைத்திருக்கிறார் தனது சேவை மனப்பான்மை மூலம்.  அந்த மாணவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை வைத்தும் அவர்களது திறமையின் அடிப்படையிலும் இந்த உதவிகளை அகரம் அளித்திருக்கிறது. அதுவும் ஏனோதானோ என்றில்லாமல் மிகச் சரியான அளவீடுகளை அறிவியல் முறையில் பயன்படுத்தி அதை செயல்படுத்தி இருக்கிறார்கள்.அந்த வெற்றிப் பயணம் பற்றிய ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியில் சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பானது. அதில் ஒரு மாணவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். அம்மா, அப்பா இருவரும் குவாரியில் கல் உடைக்கிறார்கள். சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு நாள் முழுவதும் உடைத்து ஒரு டிராக்டர் டிரெய்லரை நிரப்ப வேண்டும். சம்பளம் அப்பாவுக்கு ரூ.100. அம்மாவுக்கு ரூ.70. அந்த அம்மாவுக்கு தன் மகன் டாக்டராகப் போகிறான் என்பதின் மகிழ்ச்சியைக் கூட சரியாக வெளிப்படுத்த தெரியவில்லை. இவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வைத்து அவர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சூர்யாதானே.

மற்றொரு மாணவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு சென்னை வர பணம் இல்லாததால் கிணறு வெட்டும் தொழிலுக்குச் சென்று 200 ரூபாய் பெற்று பிறகு வந்திருக்கிறார். அவரும் எதிர்காலத்தில் ஒரு டாக்டர் என்பது ஆச்சரியம். இப்படி ஏராளமான உணர்ச்சிப்பூர்வமான உண்மைக் கதைகள் அந்த நிகழ்ச்சியில்.

இந்த மாணவர்களின் முழு கல்விச் செலவையும் அகரம் அறக்கட்டளையே ஏற்கிறது என்பது கூடுதல் தகவல். கஷ்டப்பட்டவனுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும் என்பது போல தங்களை யாரோ சிலர் வாழ்வில் முன்னேற வைத்து தங்கள் குடும்பத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள் என்று உணர்ந்து தாங்களும் மற்றவர்களுக்கு எதிர்காலத்தில் உதவுவார்கள் இந்த மாணவர்கள் என நம்பலாம்.


தனது பிறந்தநாளுக்கு சந்திக்க வரவேண்டாம், இப்போதைக்கு அரசியலுக்கு வர மாட்டேன். வந்தாலும் வருவேன் என்று குழப்புவதும், 50வது பிறந்தநாளுக்கு 50 இஸ்திரிப் பெட்டி வழங்கி வாழ்வில் ஒளியேற்றுகிறேன் என்பதும், உங்கள் அம்மா அப்பாவை காப்பாற்றுங்கள், குடும்பத்தைக் கவனியுங்கள் (யாருக்கும் தெரியாது பாருங்க...) என்று கேனத்தனமாக அட்வைஸ் செய்வதும் இருந்தால் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியுமா?

நல்ல வேளை. சூர்யாவுக்கு அப்படி ஓர் எண்ணம் இல்லை. அவர் செய்வதை விளம்பரம் செய்யவும் இல்லை. உண்மையாகச் செய்கிறார். அதையும் உறுதியாகச் செய்கிறார். தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு நல்ல சினிமா ஹீரோ...இல்லை இல்லை.. ரியல் ஹீரோ...சூர்யா...உண்மைதானே?

விஜய் டிவியில் வந்த அந்த நிகழ்ச்சியை பார்க்க இங்கே கிளிக்.

பிடிச்சிருந்தா இன்ட்லியில் ஒரு ஓட்டு குத்துங்க...

Sunday, August 22, 2010

எஸ்.ஜே.சூர்யாவும் பிரதமர் லாலு பிரசாத் யாதவும்


இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் லாலு பிரசாத் யாதவுக்கும் என்ன சம்பந்தம். அவரு படத்துல இவரு கதாநாயகனா நடிக்கிறாரா (சும்மா சொல்லக் கூடாது தலை நிறைய முடியோட நல்லா கொலுக் மொலுக்னுதான் இருக்கிறார் லாலு) அல்லது இவரு தயாரிக்கிற படத்த அவரு இயக்குகிறாரா (பணமா...அட பிகார் மாநிலமே அவரோடதுதானே...9 குழந்தைகளைப் பெற்று 950 கோடி ரூபா ஊழல் செய்தாரே...நல்ல வெவரமான ஆளுதான்) அதெல்லாம் இல்லை ஜென்டில்பதிவர்ஸ்...

ஏதோ ஒரு படத்துல எஸ்.ஜே.சூர்யா அம்பானிய விட ஒரு ரூபா அதிகமா சம்பாதிக்கனும்னு சவால் விட்டு ஜெயிப்பாரே (ஆனா படம் ஊத்திக்கிச்சு)  அது போல் லாலு பிரசாத்துக்கும் ஆசை வந்துவிட்டது. அதற்கு முன் 2 நாள்களுக்கு முன் நடந்த மக்களவைக் கூட்டத்தில் வழக்கம் போல் எல்லோரும் குரூப்பா கட் அடிப்பது என்று முடிவு செய்த எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை ஓவராகக் கலாய்த்ததால் கடுப்பான மீராகுமார் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார். அப்போது அரசாங்கத்தை (அதாங்க நம்ம மன்மோகன்) அணு உடன்பாட்டு மசோதா தொடர்பாக கலாய்க்க முடிவு செய்து ஒத்திகை நாடாளுமன்றம் நடத்தினார்கள். இதில் 78 பேர் உறுப்பினர்கள். அதுக்கு நம்ம  லாலு பிரசாத் யாதவ்தான் பிரதமர். மனுசன் எப்படியோ ஜென்மசாபல்யம் அடைந்து விட்டார்.

அவருக்கு திடீர் ஆசை என்ன வென்றால். கொள்ளை அடிப்பது என்று முடிவாகிவிட்டது. அதற்கு சம்பளம் அரசாங்கம் கொடுக்கிறது. ஏற்கெனவே விலைவாசி உயர்ந்துவிட்டது. அதனால் எம்.பி. சம்பளம் மாதம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்துவது என முடிவானது. அதை நம்ம எம்பிகளால் ஏற்க முடியவில்லை.  அரசுத் துறை செயலாளர்களைவிட நாங்க என்ன கேவலமா... படிச்சுட்டு வந்த அந்த அதிகாரிகளே இவ்வளவு கொள்ளை அடிக்கிறானுக...அவங்களுக்கு 80 ஆயிரம் சம்பளம். படிக்காமலே எவ்வளவு கொள்ளை அடிக்கிறோம்...அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. எங்களுக்கு கேவலம் 50 ஆயிரமா என்று கேட்டு எகிறிய எகிறில் நாடாளுமன்ற கட்டத்தில் ஓட்டை விழுந்து மழை தண்ணி உள்ளே வர ஆரம்பித்துவிட்டது (பின்ன...80 வருட கட்டடம் ஆச்சே அது).

இதை நீங்களே பைசூல் பண்ணுங்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்ற ரீதியில் மற்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் எல்லாம் இதுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அட இவுனுக ரொம்ப நல்லவனுங்கப்பா நமக்கும் சேத்து சம்பளம் கிடைக்க வெக்கிறானுங்க என்று ஆளுங்கட்சி எம்பிகளும் உள்ளூர ஹையா ஜாலி.. என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதில் காமெடி என்னவென்றால்...

நம்ம எஸ்.ஜே. சூர்யா ரேஞ்சுக்கு இறங்கி வந்த லாலு பிரசாத்...அரசுத் துறை செயலாளர்கள் ரூ.80 ஆயிரம் வாங்குகிறார்கள். எங்களுக்கு அவர்களைவிட ஒரு ரூபாய் அதிகமாக  வேண்டும். அப்பத்தான் எங்க ஆத்தா ...சாரி.. ஆத்மா சாந்தி அடையும் என்று கேட்க கடைசியில் ரூ.80 ஆயிரமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீ கேட்கற மாதிரி நடி...நான் கொடுத்துடறேன் என்று பேசி வைத்திருப்பார்களோ...

Wednesday, August 18, 2010

அட ஜோக்கப்பு...சும்மா சிரிங்கப்பு...எத்தனை நாளைக்குத்தான் மொக்கை என்ற பெயரில் கடி போடுவது...ஒரு சேஞ்சுக்கு கொஞ்சம் சிரிக்கிற மாதிரி நகைச்சுவை போட்டால் என்ன என்று தோன்றியதன் விளைவே இந்த இடுகை....படித்து பரவசப்பட்டு குளோஸ் பண்ணிட்டுப் போகாம அப்படியே ஒரு இன்ட்லி ஓட்டு போட்டுட்டு போங்க ராசா......

செந்தில்:  அண்ணே...சாப்ட்வேரு, ஹார்டுவேருன்னா என்னண்ணே...
கவுண்டமணி:  அட..ப்ளூடூத் மண்டையா... செடியப் புடுங்குனா சாப்ட்வேரு,, மரத்தப் புடுங்குனா அது ஹார்டுவேரு...

இயக்குநர்:    சார் இந்தப் படத்துல நீங்க பன்னி மேய்க்கிறீங்க...
அஜீத்:     என்னோட இமேஜ் கெட்டுப் போயிடுமே..
இயக்குநர்:   இதையேதான் அந்தப் பன்னியும் சொல்லுச்சு...

ரிப்போர்ட்டர்:  ஒபாமாவப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
விஜய்:   எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க..
ரிப்போர்ட்டர்:   நாசமாப்போச்சு.... உங்க  ஒப்பாமா இல்ல சார்... ஒபாமா..ஒபாமா அமெரிக்கா...
விஜய்: தெரியாதுங்ணா..


 நேர்முகத் தேர்வு-

தேர்வாளர்:   ரயில் விபத்தைத் தடுக்க என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
சர்தார்:    ரயில் தண்டவாளத்தில் ஸ்பீடு பிரேக்கர் போட்டால் ரயில் விபத்தைத் தடுக்கலாம்.

தேர்வாளர்:  ஒரு மோட்டார் எப்படி இயங்குகிறது?
சர்தார்:   டுர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்...

அவன்:   இந்த செல்போன் அழகா இருக்கே..எங்க வாங்குனீங்க?...
இவன்:  இது ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஜெயிச்சு வாங்கினது..
அவன்:  அப்படியா...வெரிகுட்...எத்தன பேரு கலந்துகிட்டாங்க?...
இவன்:  செல்போன் கடை ஓனர், போலீஸ்காரர் அப்புறம் நான்....மொத்தம் மூனு பேர்தான்.

அமெரிக்கன்: நாங்கதான் நிலவில் முதலில் கால் வைத்தோம்.
ரஷ்யன்:  நாங்கதான் வீனஸில் முதலில் கை வைத்தோம்.
இந்தியன் : நாங்கதான் முதலில் சூரியனில் கால வச்சோம்....

அமெரிக்கன்:  பொய் சொல்லாதீங்கடா...சூரியனுக்குப் போனா சாம்பலாயிடுவீங்க..
இந்தியன்:  ங்கொய்யால...நாங்க போனது நைட்லடா...கி.பி. 2070-ம் ஆண்டு...

மகன்:  அப்பா எனக்கு பேய் கதை சொல்லுங்கப்பா...
அப்பா:  சொல்றேன்.... ஒரு காலத்துல விஜய்னு ஒரு ஹீரோ இருந்தான்...
மகன்:  அய்யோ...பயமா இருக்குதுப்பா...இன்னிக்கு இது போதும்பா...நான் தூங்கறேன்...

Saturday, August 14, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கமும் 13 ஜமெட்டி பிரெஞ்சு படமும்இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படம் பார்த்திருப்பீர்கள்.. அதில் லாரென்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை கொல்ல முடிவு செய்யும் போது ஒரு புத்தகம் ஒன்றில் எப்படி எந்த முறையில் அவர்களை கொல்லலாம்  என்று பார்ப்பார். அப்போது இந்த 13 Tzameti (french)    படத்தில் வருவது போல வட்டமாக நின்று கொண்டு துப்பாக்கியை தலையில் வைப்பது போன்ற ஒரு படம் அதில் வரும். ஓ..13 ஜமேடி என்று கொக்கரித்து கத்தியபடி அவர்களை நிற்க வைப்பார். படம் பார்த்தபோது தியட்டரில் கத்த வேண்டும் போல் இருந்தது.  இருக்காதா பின்ன...இந்த சீன இதுலதானே  உருவி இருக்கிறார் நம்ம சிம்புதேவன். ஆனால் அது த்ரில்லிங் பீசு...இது காமெடி பீசு...

இந்த பதிவு படம் வருவதற்கு முன்பே நான் எழுதி விட்டேன். அதனால் என் பதிவை படித்து...அதிலிருந்து...ச்சே இப்படி எல்லாம் பேசக் கூடாது...

சில நாட்களுக்கு முன்  13 Tzameti (french) படம் பார்த்தேன். த்ரில்லர். படம் பார்த்தது மூன்று வருடங்களுக்கு முன்பு. அதை கூகுளில் தேடி ஒரு வழியாகப் பிடித்து பார்த்தேன். மறக்க முடியாத படம். இதற்கு முன்பு விமர்சனம் பதிவு எழுதி இருந்தாலும் கிளைமாக்ஸ் எழுதவில்லை. ஆனால் அவ்வளவு தூரம் படித்து விட்டு எதோ படத்தை நானே எடுத்தவன் மாதிரி மிச்சத்தை வெள்ளித்திரையில் காண்க என்பது போல கூறியது மனதை உறுத்தியது.

எல்லாம் அனுபவம்தான். அதனால் கிளைமாக்ஸ் எழுதிவிட்டேன். 8.50 லட்சம் யூரோவை வீட்டுக்கு அனுப்பிய செபஸ்டியன் அந்தப் பணத்தை அனுபவிக்க முடிந்ததா என்பதை படத்தின் முழு கதையையும் இங்கே போய்  படித்துவிட்டு பிறகு இதை படியுங்கள்...

மு.கு.: உஸ்...அப்பப்பா..பதிவு எழுத மேட்டர் இல்லேன்னா எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு.

----------------------------------------------------------------------------------------------------பிறகு மனம் மாறி, தான் ஒரு காரை மட்டும் அடையாளம் கூற முடியும் என்கிறான். கார் எண் ஜிஆர் 1313. அதைக் குறிக்கிறார் போலீஸ் அதிகாரி.

மீண்டும் ரயில் நிலையம். ரயிலில் ஏறி வாழ்வின் வசந்தத்தை நோக்கிச் செல்கிறான். அடுத்த பெட்டியில் அரேலின் அண்ணன் இருக்கிறான். மெல்ல நடந்து வந்து செபாஸ்டியன் பக்கத்தில் உட்காருகிறான். இருவரும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். அச்சமும், வெறியும் மாறி மாறி காட்டுகிறது அவர்கள் முகம்.

அப்போது அரேலின் அண்ணன் துப்பாகியால் செபாஸ்டியனை சுட்டு விட்டு அடுத்த பெட்டிக்கு செல்கிறான்.

எதற்காக இவ்வளவு தூரம் வந்தோம், ஏன் அந்த மாபியா கும்பலில் நுழைந்து உயிரை உண்மையாலுமே பணயம் வைத்து விளையாடி வெற்றி பெற்று தப்பித்து வந்தோம் என்ற பல நினைவுகள் வயிற்றை பிடித்தபடி சாய்ந்து கிடக்கும் செபாஸ்டியன்  கண் முன் நிழலாட ரயில் ஓட்டத்தின் தாளகதியின் பின்னணியில் மெல்ல இசை மேலெழ திரை மௌனிக்கிறது.
பி.கு.: எளிதாக பதிவு எழுத ஐடியாகளில் இதுவும் ஒன்னு மக்களே...சேர்த்துக் கொள்ளுங்கள்... ஹிஹி.  

புதிய பயங்கரவாதிகள்


கல்வி, உணவு, மருத்துவம் இவை மூன்றும் விற்பனைக்கானது அல்ல என்பது இந்தியாவின் பண்பாடு என்கிறார்கள். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு. இன்று கல்வி ஒரு பெரும் தொழில், உணவு மிகப் பெரும் தொழில்துறை, மருத்துவம் மாபெரும் பண இயந்திரம் ஆகிவிட்டது.

மருத்துவப் படிப்பில் இடம் பெறுவது முதல் நோயாளிக்கு இன்ன மருந்துகள் (பெரும்பாலும் தேவையற்றவை) கொடுக்க வேண்டும் அதையும் எங்களிடம் உள்ள காலாவதி மருந்துக் கடையிலேயே வாங்க வேண்டும் என்பது வரை, மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதில் இருந்து மாபெரும் மருத்துவமனை கட்டி கோடி கோடியாகச் சம்பாதிப்பது வரை மருத்துவத் துறையில் மிகப் பெரும் ஊழல்கள் நடைபெறுவது யாரும் அறியாதது அல்ல.

மருத்துவத் துறையில் நாளுக்கு நாள் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அதே போல புதிய நோய்களும் உருவாக்கப்படுகின்றனவோ என்பது போல சமீப கால நிகழ்வுகள் எண்ண வைக்கின்றன. நூற்றாண்டுகளாக மனித குலம் பயந்து நடுங்கிய அம்மை, மலேரியா போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து அழித்தது தமது சாதனை என்று மருத்துவத் துறை மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகளை நினைத்தால் புதிய புதிய நோய்களை உற்பத்தி செய்து உலகை பீதிக்குள்ளாக்குவதும் அவர்கள்தானோ என நினைக்கத் தோன்றுகிறது.

எய்ட்ஸ் என்ற எரிமலைக்குப் பிறகு பல தொற்று நோய்கள் பரவ ஆரம்பித்தன. எய்ட்ஸ் மட்டுமே சுவாசத்தின் மூலம் பரவாது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நோய்களைப் பாருங்கள். சார்ஸ் என்ற நோய் பத்து ஆண்டுகளுக்கு முன் வந்தது. எல்லோரும் முகமூடி அணிந்து சென்றனர். பிறகு சிக்குன்-குன்யா வந்தது. பின்னர் ஸ்வைன் ப்ளூ எனும் பன்றிக் காய்ச்சல் வந்து உலகையே உலுக்கியது.

இப்போது என்.டி.எம்-1 (New Delhi metallo-beta- lactamase) என்ற சூப்பர் பக் எனும் புதிய பாக்டீரியா. இது ஏற்கெனவே அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள கிருமியாகும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்துகளை வேலை செய்யவிடாத நோய்க் கிருமிகள்க்டீரியாக்கள் இவை. இதை சரி செய்து கட்டுப்படுத்துவது மிகக் கடினம் என்கிறார்கள்.

சார்ஸ் நோய் வந்த பின்னர் உடனடியாக மருந்து கண்டுபிடித்தார்கள். சிக்குன்-குன்யாவுக்கும் மருந்து கொடுத்தார்கள். மெக்சிகோவில் இருந்து பரவிய பன்றிக் காய்ச்சலில் ஓரிரு மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் உலகெங்கும் இறந்த பிறகு இதோ மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று அறிவித்தார்கள். அதை ஒரு நாடு ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு வாங்கியது. அடித்தது ஜாக்பாட் அந்த மருந்து நிறுவனத்துக்கு...

நாங்கள் ரொம்ப சுத்தத்தை பேணுகிறோம் என்று தம்பட்டம் அடிக்கும் நாடுகளில்தான் இந்த நோய்க் கிருமிகள் உருவாகிப் பரவுகின்றன என்பதே ஆச்சரியம்தான்.

திருடியவனே போலீஸின் அடி தாங்க முடியாமல் அதை மறைத்து வைத்த இடத்தைக் கூறுவது போல,  மருந்து நிறுவனங்களே ஆராய்ச்சிக்காக அல்லது கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக இது போன்ற கிருமிகளை மூன்றாம் உலக நாடுகளில் பரவவிட்டு உயிரிழப்பு ஏற்பட்டு பீதியடைய வைத்துவிட்டு பின்னர் இதோ மருந்து என்று அறிவிக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.


என்டிஎம்-1 ஐ பொருத்தவரை மருந்து கிடையாது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள். இந்திய அரசு இது உள்நோக்கம் கொண்டது என்கிறது. மக்களோ சிக்குன்-குனியா போய் பன்றி வந்தது டும்டும்டும்டும்...பன்றிக் காய்ச்சல் போய் என்டிஎம் வந்தது டும்டும்டும்டும் என்று அடுத்த தாக்குதலுக்கும் பீதிக்கும் தயாராகி வருகிறார்கள்.


துன்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமது மக்களை மீட்டெடுக்க வேறு வழியின்றி ஆயுதம் தூக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அழித்தொழிக்கின்றனர். அதை பன்னாட்டு நிறுவனங்கள், ஊடகங்கள் ஆதரிக்கின்றன. ஏனெனில், ஒருவனுடைய  உணவு, உடை, உரிமையை பறிப்பதை எதிர்ப்பது பயங்கரவாதமாம்.


அப்படி என்றால், பணம், அதிக பணம், மிக அதிக பணம் என்ற  மனப்பான்மையில் செயல்படும்  கார்பரேட் மருத்துவத் துறை நிறுவனங்கள் செய்வதும் புதிய பயங்கரவாதம் தானே.  யாரும் இதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லையே. பாவம் மனித இனம்!

Wednesday, August 11, 2010

நியூட்டனின் வெளிவராத கண்டுபிடிப்பு...

பிளாகோஸ்பியர்...அதாங்க.. பதிவுலகம் எனக்கு அறிமுகான ஆண்டு கி.பி.2006...அந்தக் காலத்திலேயே கவிதை, கட்டுரை, நகைச்சுவை, நாவல், சிறுகதை இப்படி பல விசயங்களை நான் எழுதியிருக்கிறேன் என்று பல்லு மேல நாக்கப் போட்டுச் சொல்ல மாட்டேன். பொழுது போகாம ஒரு நாள்...


Saturday, August 7, 2010

ஆட்டையப் போடும் செல்பேசி சேவை நிறுவனங்கள்
செல்/தொலைபேசி இன்றைய அவசியத் தேவை. தரைவழித் தொலைபேசியை விட செல்பேசி எனப்படும் செல்ஃபோன் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிவிட்டது. பள்ளிக் குழந்தைகள் முதல் நாட்டின் மிக உயர் பொறுப்பில் இருப்போர் வரையும், ஆடு மேய்க்கும் கிராமத்துப் பெரியவர் முதல் அகில உலகையும் ஆண்டு கொண்டிருப்போர் வரை செல்பேசி முக்கியமாகிவிட்டது. தகவல் புரட்சிக் காலம் இது.

Wednesday, August 4, 2010

மதராசபட்டினமும் அப்புக்குட்டியின் நுண்ணரசியலும்

மதராசப்பட்டினம்....எந்திரன் படத்துக்கு விமர்சனம் எழுத எல்லாரும் தயார் ஆகிட்டு இருக்கும்போது பழம் பஞ்சாங்கமா என்று தோன்றியது. இருந்தாலும் பதிவு எழுத மேட்டர் சிக்கலையே...அதனால...

கதை எல்லாருக்கும் தெரியும். பெரும்பாலான பதிவர்கள் பார்த்திருப்பார்கள். பலர் பாராட்டியும் சிலர் குறை கூறியும் எழுதினர். என் பார்வையில் பட்ட நிறைகளை சுருக்கமாக தருகிறேன்.

Monday, August 2, 2010

விஜய் ஒரு சின்ன ரஜினி: சினிமா கொட்டாய் அனுபவம்- கடைசி பார்ட்
போதும் இத்தோட நிறுத்திக்குவோம்...நீயும் எழுத வேண்டாம் நாங்களும் படிக்க வேண்டாம் என்று நினைக்கும்படி இத்தனை நாளா இத ஜவ்வு இழு இழுத்தாச்சு....ஒரு மினி தொடரை எப்படி ஒரு வருஷத்துக்கு இழுப்பது என்பதை எல்லோரும் எங்கிட்ட இருந்து கத்துக்குங்க மக்களே.... (எப்படியோ நமக்கு சீரியல் டைரக்ட் பண்ற வாய்ப்புக் கிடைச்சாலும் கிடைக்கும்...)

Thursday, March 25, 2010

பீடி சுற்றும் திப்பு சுல்தான்கள்!


கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற விழாவில் கவிஞர் புவியரசு தனது உளக் குமுறலைக் கொட்டியது குறித்து எழுதி இருந்தேன். அவருக்கு முன்பு பேசிய பேச்சாளர்களில் குறிப்பிடும்படியாகப் பேசியவர் எழுத்தாளரும் தமுஎச பொதுச் செயலருமான ச.தமிழ்ச்செல்வன்.

Friday, March 12, 2010

விஜய் ஒரு சின்ன ரஜினி: சினிமாக் கொட்டாய் அனுபவம் - பார்ட் 4


விஜய் ஒரு சின்ன ரஜினி சினிமா கொட்டாய் அனுபவம் என்ற
தொடர் பதிவை எழுத நினைத்ததற்கான காரணத்தையே மறந்து விடுவேன் போலிருக்கிறது. பல மாதம் கழித்து அதை தூசு தட்டி மீண்டும் எழுத முடிவு செய்தேன்.


விஜய் ஒரு சின்ன ரஜினி என்று ஏன் அழைக்கிறேன்/அழைக்க வேண்டும் என்பதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க காரணம் இன்னும் அப்படியே தான் உள்ளது. அதனால் எப்போது வேண்டுமானாலும் விஜயின் முடியைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு கலாய்க்கலாம்.

போகிற போக்கைப் பார்த்தால் சின்ன ரஜினி பதிவை விட சின்ன விஜய் என்று எழுதலாம் போலிருக்கிறது. “தம்பிக்கு இந்த ஊரு” என்ற காவிய சிறப்பு மிக்க படத்தைப் பார்த்த பிறகு பரத்தின் வீட்டு முகவரியை வாங்கிச் சென்று குனிய வைத்து நாலு சாத்து சாத்தலாம் என்ற அளவுக்கு கோபம் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து அநியாயமாக 50+50 ரூபாய் நாசமாக போய்விட்டது.

அது கிடக்கட்டும். இந்த தொடர் பதிவை விரைவாக முடிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த பதிவே வேண்டாம் என்று நீங்கள் நினைத்தாலும் விடப் போவதில்லை.

போன பதிவில் அந்தச் சிறுவன் வேட்டைக்காரன் படம் பார்த்தானா இல்லையா என்பதை அடுத்த பதிவில் கூறுவதாகச் சொல்லியிருந்தேன். ஞாபகம் உள்ளதா? (உனக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுடா... மாசத்துக்கு ஒன்னு எழுதிட்டு எங்களுக்கு டெஸ்ட் வேற வைக்கிறயா என்று நறநறப்பது கேட்கிறது. பிளீஸ் கோவப்படாதீங்க மக்கா...)

எம்ஜிஆர் நடித்த வேட்டைக்காரன் படம் பார்க்க டென்ட் கொட்டாய்க்கு ஆவலோடு ஓடினால் அங்கே பிரபுவும் கனகாவும் கட்டிப் பிடித்தபடி “தாலாட்டுக் கேட்குதம்மா” என்ற போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். அப்படியே விஜயகாந்த் மாதிரி ஒரு யூ டர்ன் போட்டு ஓடிவிடலாமா என்று யோசித்தான். ஏனென்றால் ரஜினி அப்போதுதான் அவனது மனதில் உள்ள சிம்மாசனத்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார். ஏற்கெனவே அங்கு உட்கார்ந்திருந்த எம்ஜிஆர் எப்போது வேண்டுமானாலும் எழுந்து செல்லும் நிலையில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தார். இதில் பிரபுவாவது குஷ்புவாவது....அந்தப் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த அவனது நண்பனுக்காக சரி வந்ததே வந்துட்டோம் பாத்துட்டுப் போயிருவோம் என்று உள்ளே சென்றான். இவ்வாறு கனகாவை ரசித்த காலங்கள் கூட உண்டு. (ஆமா...கனகா மேட்டர் என்னாச்சு...நித்யானந்தா மேட்டரில் காணாம போயிடுச்சா?)

சரி விஷயத்துக்கு வருவோம். நம்ம ஹீரோ (அட..அதுவும் மறந்து போச்சா) ரஜினியின் தீவிர விசிறியாகக் காரணம் பாட்ஷா படம் தான். அதில் வரும் ஒற்றை வரிப் பாடலுக்கு அப்புறம் தான் அவனுக்கு ரொம்பப் பிடித்துப் போனது. அதில் நக்மா பாடுவார். “கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே...”டேன்-டட-டேன்-டன் டேன்-டட-டேன்-டன் என்று மீசிக் (சாரி மியூசிக்.. அதாவது இசை...அல்லது சத்தம்னு வச்சுக்குவோம்) வரும். அன்றைக்கு முழுவதும் கண்ணாடியும் கையுமாகவே வீட்டில் இருந்தான். அவன் அம்மாவுக்கோ பையனை நினைத்து பயமாகிவிட்டது. எதற்கும் பக்கத்து வீட்டு பெண் மீது ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அதற்கு முன் உழைப்பாளி, தளபதி, அண்ணாமலை போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காவியங்களைக் கண்டிருந்தாலும் அவனால் அதை உணர முடியவில்லை. “அட நம்மளும் ரஜினியும் ஒரே நிறம்...என்ன ஒரு ஒற்றுமை. நாளைக்கே நம்மள கிண்டல் பண்ணின நாய்களிடம் சொல்லி பெருமைப்பட வேண்டும்” என்று முடிவு செய்தான். அடுத்த நாள் பள்ளியில் பெருமையடித்த போது அவனே எதிர்பாராத எதிர்ப்பு கிளம்பியது. “அடிங்கொ... நீயும் ரஜினியும் ஒன்னா... கருப்பா இருந்தா மட்டும் போதாதுடா... ஒரு இது வேணும்” என்று ரசிகக் குஞ்சுகள் அடிக்காத குறையாக மிரட்ட இவன் வெலவெலத்துப் போனான். இருந்தாலும் அஞ்சா நெஞ்சனான நம் ஹீரோ “ஒரு இது வேணும்னு சொன்னீங்களேடா... எதுடா அது” என்று கேட்க நினைத்தான். ஆனால் கர்லா கட்டையை கையாக வைத்திருப்பவனைப் போய் ஏன் சொரண்டிப் பார்க்க வேண்டும் என்று பேசாமல் வந்து விட்டான்.

இவ்வாறு ரஜினியைப் பிடிக்க வரலாற்றுக் காரணம் இருந்ததால் அவன் ரஜினி ரசிகனாகிவிட்டான். அந்தச் சமயத்தில்தான் அவன் தனது உறவினர்கள் கல்யாணத்துக்காக ஈரோட்டுப் பக்கம் செல்ல வேண்டி வந்தது. அந்த ஊர் கொஞ்சம் டவுனை விட்டு உள்ளடங்கி இருந்தது. கிராமம் என்று சொல்வார்கள். பட்டிக்காடு என்றும் நாமகரணம் சூட்டியிருந்தார்கள். கல்யாணம் காலையில்தான். இரவினில் மணமகனும் மணமகளும் கட்டித் தழுவிக் கொண்டிருக்க (அட...கற்பனையில்தாங்க) பெருசுகள் எல்லாம் சீட்டுக் கட்டும் பீடிக் கட்டுமாக பாயில் வட்டமிட்டிருந்தார்கள்.

அப்போது அவனும் அவனைப் போன்ற இளசுகளும் சேர்ந்து சினிமாவுக்கு போகலாம் என்று முடிவு எடுத்தனர். எல்லோரும் போவதற்கு அனுமதி கிடைத்தது பெருசுகளிடம் இருந்து. இந்த பட்டிக்காட்டில் எங்கேடா தியேட்டர் இருக்கு என்று அவர்கள் பின்னாலேயே சென்றான். நான்கு தெரு தள்ளி வந்தால் “அடங்கொக்க மக்கா இங்கேயும் ஒரு டென்டு கொட்டாய்” என்று அவனறியாமலேயே வாயிலிருந்து வார்த்தைகள் எழும்பின.

வழக்கம் போல யாரோ ஒருவர் டிக்கெட் எடுக்க இவன் என்ன படம் என்று அருகிலிருந்த மாமா பையனை வினவினான். அவன் சொன்ன படத் தலைப்பு ஆச்சரிப்பட வைக்கவில்லை. யார் நடிச்சதுடா என்ற கேள்விக்கு அவன் சொன்ன பதில் இவனுக்குப் புரியவில்லை. இவன் நினைச்சதோ ரஜினி, கமல் படமாக இருக்கும் என்பது. ஆனால் போஸ்டரில் பார்த்த முகமோ பக்கத்துத் தெருவில் கோலிக்குண்டு ஆடுபவன் போன்றிருந்தது. இதெல்லாம் ஒரு படமா என்று கேட்கத் தோன்றினாலும் சினிமா பார்க்கும் ஆசையில் உள்ளே சென்றான்.

இவன் பேர் என்னடா மாப்ள? நம் ஹீரோ கேட்ட கேள்விக்கு அவன் பார்த்த பார்வை இருக்கிறதே எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. அட பட்டிக்காட்டு மூடமே என்று நினைத்தானோ என்னவோ சில விநாடிகள் மௌனமாய் இருந்துவிட்டு சொன்னான்.

இவன் பேரு........................

(தொடரும்)

Wednesday, February 24, 2010

சிந்திக்க வைத்த ஸ்ரீ பிரியாவும், குஷ்புவும்
சன், கலைஞர், விஜய் என்று எதைத் திருப்பினாலும் ஒரு ஆபாசக் குப்பை அல்லது அறுவை தொடர்கள் தான். ஆனால் சில நேரங்களில் அவர்களுக்கே தெரியாமல் நல்ல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறார்கள்.

திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு ஒரு நிகழ்ச்சியை கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்புகிறார்கள். மானாட மயிலாட போன்ற ஆபாச கூத்துக்களையும், பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நடக்கும் கும்மாங்குத்து நடனங்களையும் பார்ப்பதற்கு எப்போதுமே எனக்கு விருப்பம் இல்லை.

தனியாக இருக்கும் போது பார்க்க ஆவல் இருந்தாலும் (ஜாள்ளத் துடைச்சிட்டேன்) வீட்டில் பெற்றோர், சகோதரிகள் இருக்கும் போது பார்ப்பதற்கு சங்கடமாக இருக்கும். அதனாலேயே சிரிப்பொலி, ஆதித்யா தவிர எந்தச் சேனலும் நான் பார்ப்பதில்லை. எந்தச் சேனலைத் திருப்பினாலும் சினிமா அல்லது சினிமா பாடல் அல்லது சினிமாவை வைத்து குத்தாட்டம் என்று ஒரு விரசமாக மாறிவிட்டது சாட்டிலைட் சேனல்கள்.

ஆனால் சேற்றில் முளைத்த செந்தாமரை என்பார்களே அது போல ஒரு சில நல்ல நிகழ்ச்சிகளும் சன், கலைஞர் டிவிகளில் வருகின்றன. அதில் பூவா தலையா என்ற ஒரு நிகழ்ச்சி கலைஞர் டிவியில் திங்கள் இரவு 10 மணிக்கு வருகிறது. முழுவதும் பெண்களே விவாதிக்கும் ஒரு அரங்கம். ஒரு தலைப்பு, இரு பிரிவுகள். நடுவர்களாக நம்ம குஷ்பு, ஸ்ரீ பிரியா.

எல்லோருக்கும் இருக்கும் ஆதங்கம் போல, கலைஞர் டி.வி உள்பட எல்லா சானல்களும் தமிழைக் கொலை செய்கின்றன என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஓரளவுக்குத் தமிழ் பேசுகிறார்கள். ஓரளவுக்குத்தான். ஆனால் குஷ்புவை பாராட்டியே ஆக வேண்டும். பொதுவாக
நடிகைகளில் எனக்கு சமீப காலமாகப் பிடித்தவர் குஷ்பு. அழகுக்காக மட்டுமல்ல. அவர் பேசும் தமிழ். உச்சரிப்பு கூட ஓரளவு மிகச் சரியாகப் பேசுகிறார். ஆனால் பெரியார் கொள்கைகள் என்பதை கொள்ளைகள் என்று சொன்னதை ஏற்க முடியாது. பாவம் விட்டு விடுவோம். நமீதாவை விட நன்றாகவே பேசுகிறார். படிக்கிறார். ஜாக்பாட் நிகழ்ச்சியில் படித்தாரே. (ஒரு வேளை ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படித்தாரோ?)

பூவா தலையா நிகழ்ச்சியில் கடந்த வாரம் தமிழை வளர்த்தது பழைய திரைப்படங்களா புதிய திரைப்படங்களா என்ற விவாதம் நடந்தது.
 பங்கேற்றவர்கள் பெரும்பாலும் நல்ல தமிழிலேயே பேசினர். விதிவிலக்காக சிலர் ஆங்கிலம் கலந்து பேசினாலும் தங்கள் தவறை உணர்ந்து தமிழிலேயே பேசினார்கள்.

ஸ்ரீ பிரியா மிகத் தெளிவாக தமிழில் அழகாகப் பேசினார். அதிலும் ரேடியோ என்பதற்கு வானொலி என்று கூட அழகுத் தமிழில் பேசினார். நிறைய தமிழச் சொற்களைப் பேசினார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால்
வட இந்தியப் பெண்ணான குஷ்பு தனது குழந்தைகளுக்கு தமிழ் பாடத்தை அவரே வீட்டில் சொல்லிக் கொடுப்பதாகச் சொன்னார். அது தான் ஆச்சரியம். உண்மையாக இருக்கும் என்றே நம்புகிறேன். இந்த ழ, ல, ள உச்சரிப்புதான் சமயத்தில் எனக்கு வரமாட்டேன் என்கிறது என்று சொன்னார்.

முடிவு என்னவோ பழைய திரைப்படங்களே தமிழை வளர்த்தன என்பதுதான். அதுவல்ல முக்கியம். அங்கு பேசிய இரு நடிகைகளின் தமிழ் பற்றிய அக்கறைப் பேச்சே முக்கியம்.

அதிலும் ஸ்ரீ பிரியா சொன்னது. தமிழை யாரும் வளர்க்க வேண்டாம். அதை சரியாக உச்சரித்தாலே போதுமானது. தமில், டமில், டாமில், என்று சொல்லாமல், உங்கள் தாயை அழைப்பது போல் அழகாக தமிழ் என்று முதலில் பேசுங்கள் என்றார். இத்தனைக்கும் அவர் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை என்றார். திரைப்பட வசனகர்த்தாக்களே தன்னை நல்ல தமிழ் பேச வைத்தார்கள் என்றார்.

இதெல்லாம் எழுதிக் கொடுத்து பேசிய பேச்சுகளாக நினைக்கலாம். ஸ்ரீ பிரியா தமிழ் நடிகை அதனால் அப்படி நினைக்க முடியவில்லை. குஷ்புவை பொருத்தவரை ஜெயா டி.வி. ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்தே அவரது தமிழை கவனித்து வருகிறேன். முடியாத இடத்தில் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார். அதனால் இந்த நிகழ்ச்சியிலும் இந்த பகுதி மட்டுமல்ல எல்லா பகுதியிலும் நல்ல தமிழே பேசுகிறார். ஏன் மற்ற நடிகை, நடிகர்கள் நல்ல தமிழ் மட்டுமல்ல தமிழே பேசுவதில்லை என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

கடைசியாக ஒன்று. அதில் பேசிய ஒரு பெண், இந்தக் காலத்திற்கு ஏற்ப ஆங்கிலம் கலந்து வசனம் வருவது இயற்கைதானே அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு ஸ்ரீ பிரியா சொன்ன பதில் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தது.


இங்க பாருமா......ஊரான் புள்ளைய வளக்கறதுக்காக உன் புள்ளைய அம்மணமா விடாதே.

இது எப்படி இருக்கு?

மனதுக்கு நிறைவாக இருந்த ஒரே உருப்படியான டி.வி. நிகழ்ச்சி பூவா, தலையா.

Tuesday, February 9, 2010

13 Tzameti (french) மரண விளையாட்டுநீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள ஒரு அதிகாரிக்கோ அல்லது சக பணியாளருக்கோ ஒரு கடிதம் வருகிறது. ஒரு முக்கியமான இடத்தில் ஏராளமான பணம் இருப்பதாகவும் அந்த இடத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற தகவலும் அதில் இருக்கிறது. ஏற்கெனவே பணத் தேவையில் இருக்கும் உங்களுக்கு அது தெரியவர, எதேச்சையாக அந்தக் கடிதம் உங்கள் கைகளில் சிக்குகிறது. நீங்கள் அதில் கூறப்பட்ட வழிமுறைப்படி அந்த இடத்துக்கு ஆவலோடும், அதே சமயம் கொஞ்சம் பயத்தோடும் புறப்பட்டுச் செல்கிறீர்கள். நடக்கப் போகும் விபரீதம் பற்றி அறியாமலும்தான்.... 

Wednesday, January 27, 2010

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...யார் வென்றால் என்ன
யார் தோற்றால் என்ன
யார் ஆண்டால் தான் என்ன

பொன் ஆனாலும்
ராஜா என்றாலும்
வழி பிறக்காத
வாழ்வொன்றுதான்
காத்திருக்கிறது எமக்கு

மிச்சமிருக்கும் உயிரையும்
வெந்த சோற்றுக்காய்
அல்லலுற்று
வீணாய்த்தான் போக்குவோமோ?

கேள்விகளால் நிறைகிறது
ஈழம்!

Monday, January 25, 2010

இலவச டி.வி.யும் அமைச்சர்களின் நையாண்டியும்கடந்த தேர்தலின்போது கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார் கலைஞர். அதனால் ஏராளமானோர் பயன் பெற்றனர். கிலோ அரிசி அதுவும் ரேசன் அரிசியை யார் வாங்கப் போகிறார்கள் என்று கேட்டபோது என் நண்பனிடம் இருந்து வந்த பதில் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவன் வங்கியில் கடன் வாங்கி பொறியியல் படிப்பைப் படித்து முடித்தான். பிறகு நல்ல வேலையும் கிடைத்தது. பணி நிமித்தமாகத் தான் அவனைத் தெரியும். ஏன் எங்கள் வீட்டில் வாங்குகிறோமே என்றபோது தான் ரேசன் அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாய் என்பது எத்தனை பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று புரிந்தது. ஆனால் அதையும் கடத்துகிறார்கள் அதிகாரிகளின் ஆசியுடன் என்பது கொடூரமானது.

Saturday, January 23, 2010

கூகு‌ள்-சீனா தகராறு!

19.01.2010 தினமணியில் வெளியான என்னுடைய கட்டுரையின் முழு வடிவம்


உனக்குத் தெரிந்தது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதும், உனக்குத் தெரியாதது என்ன என்பதை அறிந்து கொள்வதுமே வாழ்வின் உண்மைத் தேடல் என்றார் சீனத் தத்துவஞானி கன்ஃபூசியஸ். அப்படிப்பட்ட நாட்டில் இன்று பரவலான தகவல் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
தகவல்களைத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு மனிதனின் தனியுரிமை என்ற கருத்து இன்று உலகெங்கும் உள்ள பல்வேறு அரசுகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

Friday, January 22, 2010

ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் 'ரோப்' (Rope) - ஒரு ஸ்டேஜ் த்ரில்லர்
த்ரில்லர் சினிமா இயக்குநர் ஆல்பிரட் ஹிட்ச்காக் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரது சைக்கோ என்ற திரைப்படம் பார்க்காத உலக சினிமா ஆர்வலர்களும் இருக்க முடியாது. ஹிட்ச்காக் முதன்முதலில் டெக்னிகலரில் எடுத்த திரைப்படம் ரோப் (Rope). இப்படம் 1948-ல் வெளியானது. இதன் பிளாட் விவாதத்துக்கு உரியதாக இருந்தது போலவே அதன் டெக்னிக்கல் அம்சத்துக்கும் பாராட்டப்பட்டது.

Tuesday, January 19, 2010

கலைஞரும் தமிழுணர்வும் மானாட மயிலாடவும்...


கலைஞரின் தமிழுணர்வு கண்டுதான் அவர் மீது ஒரு பற்று எனக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் (அதாங்க சின்ன பையனா இருந்தப்போ....இப்பவும் சின்னப் பையதான்...ஆனா கொஞ்சம் பெரிய சின்னப் பையன்) எம்ஜிஆர் மீது தான் ஆர்வம் அதிகம். காரணம் சினிமா. அதில் வரும் வாள் சண்டை. அதனால் எம்ஜிஆர் மீது ஒரு இது. எது? அதாங்க ஒரு பாசம், நேசம். அப்புறம் கொஞ்சம் புத்தி வந்த பிறகு புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டேன். அப்புறம் தமிழுணர்வு ஊற்றெடுக்க ஆரம்பித்து அது தமிழிலக்கியம் படிப்பது வரை கொண்டு சென்று விட்டது. அதை விடுங்க.

Monday, January 18, 2010

ஜுனியர் விகடன் + திருமாவளவன் = முள்வலி பார்ட்-2 ?
கடந்த ஆண்டு ஜூனியர் விகடன் படிக்கும் போதெல்லாம் புல்லரிக்கும். ஈழப் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதில் வரும் செய்திகளும், படங்களும், பேட்டிகளும் அதை வாங்க வைத்தன. குறிப்பாக தலைவர் பிரபாகரன் படம் போட்ட எந்தப் பத்திரிகையானாலும் வாங்கித் தொலைத்தேன். இதெல்லாம் இணைய தளங்களில் வரும் செய்தி, ஆய்வுக் கட்டுரை என்று எல்லாவற்றையும் படித்துவிட்டு தாங்களே செய்தியாளர்களை அங்கே அனுப்பி போரின் உண்மை நிலவரத்தைக் கண்டு வந்தது போல எழுதுகிறார்கள் என்று பிறகுதான் தெரிந்தது.