Monday, September 13, 2010

ரஜினியின் ராஜதந்திரம்!



முதலில் சொல்ல வேண்டிய விஷயத்தை கடைசியில் சொன்னால் அப்புறம் முதலில் என்னைப் பற்றி தவறாக நினைத்துவிட்டு கடைசியில் அடடே இவன் அப்படி இல்லை போல இருக்கிறது என்று முதலில் நினைத்ததற்கு எதிராக கடைசியில் நீங்கள் நினைக்கக் கூடும்.

புரிந்ததா. இது தான் ரஜினி. பாட்ஷா படம் வந்தபோதுதான் ரஜினியை மிகப் பிடித்துப் போனது. அன்றிலிருந்து அவர் நடித்த படம் எப்படி மொக்கை போட்டாலும் ஒரு வரலாற்றுக் காவியம் போல பார்த்திருக்கிறேன். அது சிவாஜி வரை தொடர்ந்தது. எந்திரன் படத்தில் கதை மட்டும் சிவாஜி மாதிரி டம்மி பீஸாக இருந்தது என்றால் படம் ஊத்திக்கும். தினமும் ஒரு முறையாவது எப்எம்மில் பாட்டுப் போடுகிறார்கள். வழக்கமாக ரஜினி படத்தில் பாடல்கள் எல்லாம் புரியம் படி தெளிவாக இருக்கும்.  எந்திரன் பாடலில் ஒன்னுகூட மனதில் ஒட்ட மாட்டேன்கிறது. சந்திரமுகியில் கூட நன்றாக இருந்தது. ரஜினிக்கு எதிராக சதி செய்ய ரஜினியுடன் கூடவே கவிஞர்கள் இருக்கிறார்கள் போலிருக்கிறது.

நான் ரஜினி ரசிகன், கமல் ரசிகன். அல்லது யாருக்கும் ரசிகன் அல்ல. நல்ல சினிமாக்களை விரும்பிப் பார்க்கும் ரசிகன். உலக சினிமா ரசிகன் என்று வையுங்களேன்.

ரஜினியின் இரண்டாவது மகள் திருமணத்துக்கு முதலில் ஜெயலலிதாவை நேரில் சென்று அழைத்தார்கள். பிறகு முதல்வர் முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியை நேரில் அழைத்தார்கள். தமிழ்நாட்டு ஈழப் போராளி திருமாவளவனைக் கூட விட்டுவைக்காமல் அழைத்தார் ரஜினி. உண்மையில் அரசியல் நாகரிகம் தெரிந்தவர் ரஜினி என்றே இந்த செயல்கள் அவரை உயர்த்தின.






அதே நேரம் அடுத்து ஆட்சிக்கு வந்த பின்னர் பழசெல்லாம் ஞாபகம் வச்சு நீ எம்மேல ஊத்துனாலும் ஊத்தீருவ என்று அமைதிப்படையில் சத்தியராஜ் சொல்வது போல ஜெயலலிதா நடந்து கொண்டால் என்ன செய்வது என்ற பயத்தில் அவருக்கு முதலில் பத்திரிகை வைத்தார் என்று கூறுவோரை ரஜினியின் பரம வைரியாகவே பார்க்கிறேன். (கலைஞர் வந்தார். ஜெயலலிதா வரவில்லை.. ஏன்?)



ஆனால் திருமணத்துக்கு 2 நாள் முன்னாடி ஒரு அறிக்கை விட்டு ரசிகனின் கன்னத்தில் விட்டார் பாருங்க ஒரு அறை. அது தான் ரஜினியின் ராஜதந்திரம். எல்லோரையும் அழைத்தாகிவிட்டது. ரசிகர்களை அழைக்கவில்லை என்றால் எந்திரன் படம் என்னாவது...அரசியல் பூச்சாண்டி அஸ்தமனம் ஆகி விடுமே..கோடிகளை சம்பாதிக்க முடியாதே...என்று நினைத்திருப்பார் என்று தப்பு தப்பாக நீங்கள் நினைப்பது போல் அவர் நினைக்கவில்லை.


அதனால் ரசிக மகாஜனங்களே உங்களை எல்லாம் அழைத்து விருந்து போட்டு என் மகள் திருமணத்தை கண் குளிர காண வேண்டும் என்று ஆசைதான். ஆனால் சென்னையில் இட வசதி இல்லை. போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். அதனால் வீட்டிலேயே சோற்றை தின்றுவிட்டு உங்க அப்பா அம்மாவை காப்பாற்றுங்கள் என்ற ரீதியில் அறிக்கை விட்டார் ரஜினி. அதவாது ரசிகர்களை மறக்கவில்லை. திருமணத்துக்கு அழைக்காமல் விட்டுவிட்டார் என்று யாரும் நினைக்கக் கூடாது. அதே நேரம் அழைத்தது போல் இருக்க வேண்டும். அப்போதுதான் ரஜினியின் ராஜதந்திரம் வேலை செய்தது.

உங்களை அழைக்க ஆசைதான். இருந்தாலும் நெருக்கடி ஏற்பட்டுவிடும். அதனால் உங்கள் ஆசியை மட்டும் உங்க வீட்டிலிருந்தே கொடுங்க அது போதும் என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட ரசிக மகாஜனங்கள் புளகாங்கிதம் அடைந்து எந்திரன் ரிலீஸ் எப்போ என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

இது எப்டி இருக்கு?


9 comments:

நாஞ்சில் பிரதாப் said...

பத்த வச்சுட்டாருய்யா...பரட்டை...

எஸ்.கே said...

நீங்க சப்போர்ட் பண்ணிறீங்களா? இல்ல எதிர்க்கிறீங்களா? ஒன்னுமே புரியலையே! :-)

venkat said...

ரஜினி பிழைக்க தெரிந்த மனிதர் - ஜூனியர் விகடனில் வெளி வந்த ரஜினிக்கு மனம் திறந்த கடிதம் படியுங்கள்.

maya said...

ரஜினி ரஜினிதான்

vivekam said...

ரஜினி ரெம்ப நல்லவர்பா

ரகுநாதன் said...

@நாஞ்சில் பிரதாப்

ஹிஹி...நம்ம வேலையே அதானே...

ரகுநாதன் said...

@எஸ்.கே
//நீங்க சப்போர்ட் பண்ணிறீங்களா? இல்ல எதிர்க்கிறீங்களா? ஒன்னுமே புரியலையே!//

ரஜினி மட்டுமல்ல ரஜினி பற்றிய பதிவும் அவரைப் போலத்தான். புரியாது.. ;)

ரகுநாதன் said...

@வெங்கட்

பின்ன சும்மாவா...கோடி கோடியா நீங்களும் நானும் சம்பாதிக்க முடியுமா...அதனால் அவர் வெவரமானவர்தான். :)

ரகுநாதன் said...

@maya
@vivekam
நன்றி...