Tuesday, September 7, 2010

சும்மாவே இருக்கமாட்டாரா ஜேக்கப் ஜுமா?



ஜேக்கப் ஜுமா. தென்னாப்பிரிக்காவின் அதிபர். 1990-களில் தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் இணைந்த கட்சிப் பணியாற்றினார். எத்தனை நாளுக்குத்தான் பொதுநலம் பேசுவது என்று நினைத்திருப்பார் போல...உடனே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். (அவருடன் எத்தனை பேர் காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை.)

காங்கிரஸின் தலைவராக இருந்த தபோ மெபிகியை தள்ளிவிட்டுவிட்டு 2007-ல் அதன் தலைவரானார். அப்படியே தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துவிட்டார். இப்போது அதிபர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பொதுவாழ்க்கையில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் கில்லாடியான ஆள்தான் ஜுமா.


ஊழல் வழக்கு அவர் மீது இருந்தது போலவே 31 வயது காங்கிரஸ் உறுப்பினரான எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பெண்ண கற்பழித்தாக வழக்கு நடந்தது. அப்புறம் எப்போதும் போல அரசியல்வாதியே வெற்றி பெற்றார்.

வாலி படத்தில் விவேக் சொல்வது போல ஏற்கெனவே கல்யாணமாயி 2 குழந்தைகடா...அப்புறமா ஒரு கல்யாணம் வேற ஆயிருச்சு என்பாரே...அது போல ஏற்கெனவே 5 மனைவிகள். அவர்களுக்கு 20 குழந்தைகள்.
2007-ல் குடும்ப நண்பரின் மகள் மீது கை வைத்து விட்டார் இந்த ஜகதலப்பிரதாபன். விளைவு நெம்பர் 20க்கு தந்தை ஆகிவிட்டார். கடைசியாக ஜனவரி 2010-ல் தொபேக்கா ஸ்டேசி மடிபா என்ற மனைவிக்கு குழந்தை பிறந்தது. அது நெம்பர் 21.


அத்தோடு சும்மா இருந்தாரா ஜுமா...ஹும்..அதான் கிடையாதே..ஆளப் பாத்தா இன்னும் 10 கல்யாணம் பண்ணுவார் போலிருக்கிறது.

மறுபடியும் ஒரு பெண்ணை காதலிக்கிறார். நல்லா கவனியுங்கள் மக்களே ஐயாவுக்கு வயது 68. சக்கர நாற்காலி எல்லாம் கிடையாது. ஆட்டத்தைப் பார்த்தீங்கல்ல...


தெரிஞ்ச வூடு தெரியாத வூடு என்று எங்குவேண்டுமானாலும் பால் குடிக்கும் பழக்கம் உடைய ஜுமா பூனை ஒரு பெண்ணை காதலித்தால் சும்மா இருக்குமா? விளைவு நெம்பர் 22 ரெடியாகிவிட்டது.

இதெல்லாம் இருக்கட்டும். 5 மனைவிகள், ஒரு காதலி, 21 குழந்தைகளுக்கு அவர் செய்யும் செலவு ஆண்டுக்கு ரூ.6.5 கோடியாம்... அவர் பணமா இல்லை அரசாங்கப் பணமா என்று தெரியவில்லை.

போங்கிவெ குளோரியா நெமா என்ற அந்தப் பெண் ஜுமா மூலம் தாயாகிவிட்டார். அடுத்த ஜனவரியில் அவருக்கு குழந்தை பிறக்குமாம். இது எப்பூடி...சும்மா இருக்கமாட்டாரோ ஜுமா.


யோவ்...உலகத்துல இப்படி எல்லாம் நடந்துட்டு இருக்குது... அதை விட்டுட்டு குடும்ப அரசியல், மகன்,மகள், பேரன்களுக்கு பதவி கொடுக்கிறார் என்று எங்களைச் சொல்றீங்களே...

(யாரங்கே...யார்றா அங்கே.. எவன் அவன் கொரலு கொடுக்குறது...)

2 comments:

கருந்தேள் கண்ணாயிரம் said...

இந்த மாதிரி ஒரு தலைவர் நம்ம தமிழ்நாட்டுல இருந்தால் ?? ;-) நினைக்கவே காமெடியா இருக்கு ;-)

ரகுநாதன் said...

@ கருந்தேள் கண்ணாயிரம்

வாங்க பாஸ்....

ஹஹஹா.... இருக்காங்க..ஆனா வெளிய தெரியறது ஒரு உருவம் தான். ஆனா உள்ளே இருப்பது பல ரூபங்கள். அதெல்லாம் வெளிய விட்டா நாடு தாங்காதுன்னு ஒரு ஓரமா படுக்கப் போட்டிருக்காங்க...அவ்வவ்வ்வ்வ்வ்.... :)