Wednesday, August 4, 2010

மதராசபட்டினமும் அப்புக்குட்டியின் நுண்ணரசியலும்

மதராசப்பட்டினம்....எந்திரன் படத்துக்கு விமர்சனம் எழுத எல்லாரும் தயார் ஆகிட்டு இருக்கும்போது பழம் பஞ்சாங்கமா என்று தோன்றியது. இருந்தாலும் பதிவு எழுத மேட்டர் சிக்கலையே...அதனால...

கதை எல்லாருக்கும் தெரியும். பெரும்பாலான பதிவர்கள் பார்த்திருப்பார்கள். பலர் பாராட்டியும் சிலர் குறை கூறியும் எழுதினர். என் பார்வையில் பட்ட நிறைகளை சுருக்கமாக தருகிறேன்.படம் நடக்கும் காலம் 1947 சுதந்திர போராட்டம் உச்சமாக இருந்த காலம். அப்போது சென்னை மாகாண கவர்னர் மகளுக்கும் துணி துவைக்கும் இனத்தை சேர்ந்த ஒருவனுக்கும் காதல். இதில் கொஞ்சம் அப்போகலிப்டோ, டைடானிக், லகான் என்று கலந்து உருவாக்கி இருக்கிறார்கள்.

முதலில் வயதான துரை அம்மாளுக்கு ஒரு பூச்செண்டு. நடிப்பில் பின்னி படல் எடுத்துடுச்சு. எடிடிங்கில் காட்டிய கிரியேடிவ் அருமை. கிராபிக்ஸ் கூவம் சூப்பர். என்று அடுக்கிகொண்டே போகலாம்.

ஆனால் 1947 இல் நம்ம நாயகன் ஆர்யா படிக்காதவன். அதுவும் கூலி வேலை செய்பவன். மல்யுத்த வீரன் வேறு. ஆனால் படித்து காங்கிரசில் பெரிய பதவியில் இருந்து கொண்டு அரசியல் செய்வது போல மீசை இல்லாமல் இருக்கிறார். தலையை வேறு கிராப் வெட்டியுள்ளார். கேரக்டருக்கு பொருத்தமே இல்லை.காலேஜ் ஸ்டுடென்ட் போல இருக்கிறார்
அதே போல வெள்ளைக்காரிக்கும் நாயகனுக்கும் காதல் வந்தது எப்படி என்றும் தெரியவில்லை

ஆனால் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அரசியலில் நாட்டின் சுதந்திரத்தில் அவருக்கு என்று எந்த கருதும் இல்லை. அவனை சார்ந்த மக்களில் ஒரு பிரிவினர் வெள்ளைகாரனுடன் எதுக்கு வம்பு என்று தங்கள் வேலை வெட்டியை பார்கிறார்கள்.

அதே போல் என்ன நடந்தாலும் ஒருவர் தூங்கி கொண்டே இருப்பார். அவர்தான் அப்புக்குட்டி. (வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா ஜோக் நினைவு வருகிறதா, கில்லியில் ஹோமம் வளர்த்தும் போது விஜய் மீதான கோபத்தை பிரமானந்த காட்டும் போது அடி வாங்குவாரே அவர்தான்.)
ஆங்கிலேய கவர்னர் வீடு சிப்பந்தி சீருடை அணிந்திருக்கும் அவர் ஆரியவுக்கும் போலீஸ் கமிசனருக்கும் சண்டையின்போது கூட தூங்குவார். இந்தியாவுக்கு சுதந்திரம் என்றாலும் தூங்குவார். இங்குதான் இயக்குனர் விஜய்யின் நுண்ணரசியல் இருக்கிறது. எத்தனை  பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.

அதாவது நாடே பற்றி எரிந்தாலும்...ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு என்ன வந்தது என்று ஒரு குரூப் இருந்தது... எப்போதும் இருக்கத்தான் செய்யும்... என்பதை குறியீடாக அப்புக்குட்டியை வைத்து காட்டியிருக்கிறார்
இயக்குனர்.அதற்காக அவருக்கு ஒரு சலாம்
இதை புரிந்து கொள்ள எஸ். ராமகிருஷ்ணனின் யாமம், தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவலை படித்தால் தெரியும். யாமத்தில் வரும் பத்ரகிரியும், வெட்டுப்புலியில் வரும் ஒரு சில கதை மாந்தர்களும் இதே அரசியலை வெளிப் படுத்துவார்கள்.

இது அன்று முதல் இன்று வரை அப்படியே தொடர்கிறது என்பதற்கு உதாரணம் ஈழப் போர். ஆர்ப்பாட்டம் போராட்டம், தீக்குளிப்பு, உயிரிழப்பு என்று பற்றி எரிந்த போது கூட  பிரபாகரனுக்கு அப்படிதாண்டா வேணும் என்று சொன்ன ஆட்களை எனக்கு தெரியும். (அவர்களிடம் கோபப்பட்டு உறவு முறிந்தது)

அதைப் பற்றி பேசி பிரயோஜனம் இல்லை என்றாலும் அந்த கேரக்டரையும் நடைமுறை வாழ்வையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக அமைக்கப்பட்டதுதான் அப்புக்குட்டி கதாபாத்திரம்.

மதராசப்பட்டினத்தில் எனக்கு பிடித்த கேரக்டர் அது.


5 comments:

வெங்கட் said...

அட இந்த கோணத்தில் சிந்திக்கவே இல்லையே...எப்படி இந்த யோசனை வந்தது.. நல்ல பதிவு நண்பரே...

ரகுநாதன் said...

@ venkat

thanks :)

Anonymous said...

சிலாகிக்கும் அளவுக்கு அதில் ஒன்றும் இல்லை. ஆனால் நீங்கள் சொல்லும் கேரக்டர் ஓகே ரகம்.

Vijay Ananth said...

நெத்திஅடி விமர்சனம்

ரகுநாதன் said...

@ vijay ananth

நன்றி விஜய் ஆனந்த் வருகைக்கும,,, கருத்துக்கும்...