Wednesday, August 11, 2010

நியூட்டனின் வெளிவராத கண்டுபிடிப்பு...

பிளாகோஸ்பியர்...அதாங்க.. பதிவுலகம் எனக்கு அறிமுகான ஆண்டு கி.பி.2006...அந்தக் காலத்திலேயே கவிதை, கட்டுரை, நகைச்சுவை, நாவல், சிறுகதை இப்படி பல விசயங்களை நான் எழுதியிருக்கிறேன் என்று பல்லு மேல நாக்கப் போட்டுச் சொல்ல மாட்டேன். பொழுது போகாம ஒரு நாள்... மதியம் சாப்பிட்டுவிட்டு இன்டர்நெட் பார்க்கப் போனேன். நல்லா கவனிங்க "பார்க்க" போனேன். (அனுபவஸ்தர்கள் புரிந்துகொள்ளக் கடவது) எவ்வளவு நேரம் தான் ஆங்கிலத்தில் படித்து அறிவை விரித்துக் கொள்வது என்று கருதியபோது மனதில் தமிழ் தாண்டவமாடியது. தமிழ்தான் இணையத்தில் வரும் என்கிறார்களே கூகிளில் பார்ப்போம் என்று டைப்பியபோதுதான் தமிழ் அறிமுகம் அடைந்தது.

பின்னர் எப்படியோ தமிழ்மணத்தைத் தெரிந்து கொண்டேன். பிளாக் என்று ஒன்று இருக்கிறது அதில் தமிழில் எழுதலாம் என்றும் புரிந்து கொண்டேன். உடனே பிளாக் உருவாகி விட்டது. முதல் தளம் வெகுநேரம் யோசித்து ஒரு பேர் வைத்தேன். தமிழ்த்தும்பி. அதற்கு ஒரு விளக்கம் வேறு....சில கவிதைகள் என்ற பெயரில் நான்கு வரி மொக்கை போட்டேன்.

அடுத்தவர் சமைத்தால் நாம் சாப்பிடலாம்...நாமே சமைத்து நாமே சாப்பிடலாமா...(ஏதாச்சும் ஆயிடுச்சுனா)..அது மாதிரி நாமே எழுதியதை நாமே படிக்கலாமா (நமக்கு நாமே மொக்கை திட்டம் எங்கிட்ட கிடையாது)  நாம் எழுதும் கடிதத்தை நாமே வைத்துக் கொள்வது மாதிரி இருந்தது. பிறகுதான் தமிழ்மணத்தில் இணைப்பது குறித்து அறிந்து கொண்டேன்.

அப்புறம் பேரை மாத்திட்டேன்.  அதாவது யாதும் கேளிர் அப்படின்னு இதுக்கு முன்னே பேர் வைத்திருந்தேன். அழகான பெயர். இந்தப் பேர் வைச்சது ஒரு கதை.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தானே சங்கப்பாடல். அது என்ன யாதும் கேளிர். என்ற கேள்வி கிட்டத்தட்ட 6637 பதிவர்களிடம் இருந்து வரல...வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா வரல...

இது ஒரு பக்கம்..சமீபத்தில் கோவையில் நடந்த பதிவர் சந்திப்பில் என்னோட பதிவு யாதும் கேளிர் என்று விளம்பியபோது.. ஓஹோ நீங்கதான் யாவரும் கேளிரா என்று கேட்டு மண்டை காய வைத்துவிட்டனர். இல்லீங்க..யாதும் கேளிர் என்று சொன்னால் யாரு கேக்றாங்க...

ஒரு நாள் நூலகத்தில் கவிதைப் புத்தகத்தை தேடியபோது தேவதேவன் கவிதை முழுத் தொகுதி கிடைத்தது. எதேச்சையாக ஒரு கவிதை கண்ணில் பட்டது. படித்தேன். அதில் ஒரு வரிதான் யாதும் கேளிர்..யாதும் ஊரே என்றால் எல்லாமே நம்ம ஊருதான். யாவரும் கேளிர் என்றால் எல்லோருமே நம்ம உறவினர்கள்தான் என்பதே சங்கப்பாடல். ஆனால் யாதும் கேளிர் என்றால் உயர்திணை மட்டுமல்ல அஃறிணையும் நம் உறவினர்களே என்று புரிந்து கொண்டேன்.

தமிழனுக்கு ஒரு குணம் உண்டு. கொஞ்சம் இளகிய மனது. அதனால் எல்லோரையும் வாழ வைப்பான். எல்லோரையும் ஏற்றுக் கொள்வான் (இதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது) மனிதர்கள் மட்டுமல்ல..விலங்கு, பறவை, மரம், செடி, கொடி, புல், பூண்டு என்று ஒரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்தும் நம் உறவினர்களே. இந்தப் பூமியில் அவையன்றி நாம் வாழ முடியுமா என்பதான எனது ஆள் மனதின் ஊடாட்டத்தில் எழுந்த அற்புத கணங்களின் விழிப்பாகவே அந்த வரிகளின் மேல் உதயமான ஒரு சிந்தனையின் வீச்சின் ஒரு பருப் பொருளின் நுண்மையான பகுதியாகவே ...(ஸ்ஸ்.. அப்ப்பப்பா..முடியல) அந்தப் பெயரைப் புனைந்தேன்.

ஆனாலும் யாரு கேக்கறாங்க.... நோ யூஸ்....சொல்லி புரிய வைக்கவும் முடியல...அதனால் இரவு முழுவதும் உக்காந்து யோசிச்சப்ப.. கூகிளாண்டவரிடம் வேண்டினேன்.... ஏதாவது பேரு போடுங்க சாமீ...என்று...

அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், புளூட்டோ, மாக்கியவல்லி, காண்ட், நீட்ஷே என்று தத்துவவாதிகள் பேரை யோசித்தேன். முடியல..

நெப்போலியன், அலெக்சாண்டர் என போர் வீரர்கள் பேரை யோசித்தேன் முடியல.. வரலாற்று அறிஞர் பேரை யோசித்தேன் முடியல...

விஞ்ஞானிகள் பேரை யோசிச்சப்பத்தான் ஐன்ஸ்டீன், கெப்ளர், கோபர்நிகஸ்...முடியல...

அப்போதான் திடீர்னு நியூட்டன் வந்தார்.. புவியீர்ப்பு விசை...டக்னு பேர் வந்துச்சு வலையீர்ப்பு விசை....அட இது நல்லாருக்கே என்றேன். முடிந்தது.

உண்மையில் நியூட்டன் என்ற பெயரை நினைத்தபோதே ஈர்ப்பு விசையுடன் ஒரு பெயர் எண்ணத்தில் உதித்துவிட்டது.  புவியீர்ப்பு விசையையே கண்டுபிடித்த அவரின் பெயரை நினைத்தவுடனே ஒரு பேரு வந்திருச்சே என்று ஆச்சரியப்பட்டு முடிக்கல...அதுக்குள்ள இந்த மொக்கயப் போட்டுட்டேன்.

என்சாய் தி டே....
பி.கு: தலைப்புக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன தொடர்பு? ச்சும்மா...ஒரு விளம்பரம்...

7 comments:

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.. வித்தியாசமான பேரு. கலக்கலான தலைப்பு. நல்லா நகைச்சுவையா எழுதறீங்க ரகு.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ரகுநாதன் said...

வாங்க விக்னேஸ்வரி... -:)

//நல்லா நகைச்சுவையா எழுதறீங்க ரகு.//

கண்ணு கலங்க வச்சுட்டீங்களே அவ்வ்வ்வவ்...


உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... -:)

Mohamed Faaique said...

ஷப்பா.... தலைப்புக்கே ஒரு தனி மொக்கையா... அடுத்து விட்ஜெட்' இட்ட கதையா எல்லாம் மொக்கை போடாதப்பா.

ம.தி.சுதா said...

இன்னிக்கு தாம்பா இந்த மொக்கை இண்ண என்னான்னு தெரிஞ்சுது....

ரகுநாதன் said...

@ ம.தி.சுதா

வாங்க...எப்பூடி மொக்க...

ம.தி.சுதா said...

சகோதரம் நான் சத்தியமா உண்மையை தான் சொல்லுறன். மொக்கையிண்ணா மொக்கை அப்பிடி ஒரு மொக்கை....