Monday, August 2, 2010

விஜய் ஒரு சின்ன ரஜினி: சினிமா கொட்டாய் அனுபவம்- கடைசி பார்ட்




போதும் இத்தோட நிறுத்திக்குவோம்...நீயும் எழுத வேண்டாம் நாங்களும் படிக்க வேண்டாம் என்று நினைக்கும்படி இத்தனை நாளா இத ஜவ்வு இழு இழுத்தாச்சு....ஒரு மினி தொடரை எப்படி ஒரு வருஷத்துக்கு இழுப்பது என்பதை எல்லோரும் எங்கிட்ட இருந்து கத்துக்குங்க மக்களே.... (எப்படியோ நமக்கு சீரியல் டைரக்ட் பண்ற வாய்ப்புக் கிடைச்சாலும் கிடைக்கும்...)



இதுக்கு முன்னே எழுதின பார்ட் இங்கே...

என் நண்பன் சொன்னான்...இவன் பேரு விஜய்டா.... ஓஹோ... என்றேன் நான். 

அன்றிலிருந்து இன்று வரை விஜய் படம் கில்லி, பிரண்ட்ஸ், துள்ளாத மனமும் துள்ளும் என்பது தவிர வேறெதுவும் பார்த்தது இல்லை. சொன்னா நம்புங்க...

சரி நான் ஏன் விஜயை சின்ன ரஜினி என்று சொன்னேன் என்றால்....அதற்குக் காரணம் இருக்கிறது.

ரஜினி போல விஜய்க்கு விசிலடிச்சான் குஞ்சுகள் அதிகம் (கற்பனையை அளவா வைங்க...)

ஒரு சில ஹிட் படம் ஓடினவுடனே  அரசியல் பக்கம் வந்து தலையைக் காட்டி முதல்வர் நாற்காலியை 100வது படத்தில் நடிப்பதற்குள் எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுவது. அதற்கு பகடைக் காயாக ரசிகர்களைப் பயன்படுத்துவது அல்லது அவர்களது அறியாமையைப் பயன்படுத்தி மொக்கைப் படத்தை ஓடவைத்து காசு பார்ப்பது....பஞ்ச் டயலாக் பேசி பஞ்சம் பிழைப்பது...

அரசியலுக்கு இந்தா வந்துட்டேன்...நான் அப்படி சொல்லவே இல்லையே...வருவேன் ஆனா வரமாட்டேன் என்று துண்டு போட்டு தாண்டி தாண்டி குதித்து காட்டுவது....பிறகு துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு அடுத்த படத்தில் நடிப்பது குறித்து பேசுவது...என்று அடுக்கிக் கொண்டே போகலாம்....

இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி விஜய் நாளை அரசியல் பிரவேசம்...என்றொரு செய்தி வெளியானது....தமிழ்நாடே பரபரபரபரபரப்பபா இருந்தது... ஆனால் நான் நினைத்த மாதிரியே அடுத்த நாள் இப்போதைக்கு இல்லை...என்று பல்டி அடித்தார் விஜய்... எல்லோரும் அவங்க அம்மா அப்பாவ காப்பாத்துங்க என்னய போய் நம்பாதீங்க என்று சொல்லாமல் சொன்னார் விஜய்....

நெசமாலுமே இவன் சின்ன ரஜினிதான் என்று அப்போது நான் உணர்ந்தேன்..



பி.கு: தொடர் முடிஞ்சி போச்சி...போங்க எல்லாரும் போய் புள்ள குட்டிகளப் படிக்க வைங்க...

4 comments:

rk guru said...

vijay oru paloon.....buzzzzzz kaththu iranguthu

சி.பி.செந்தில்குமார் said...

இந்தப்பதிவுக்குப்பரிசா உங்களுக்கு வேலாயுதம் டிவிடி ஃப்ரீ

krnathan said...

@ rk guru, சி.பி.செந்தில்குமார் வருகைக்கு நன்றி. :)

krnathan said...

செந்தில்குமார் ஏன் இந்த கொல வெறி....வேலாயுதம் படம் பார்க்கோணும்னு சாபம் வேறயா... :)