Saturday, August 14, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கமும் 13 ஜமெட்டி பிரெஞ்சு படமும்இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படம் பார்த்திருப்பீர்கள்.. அதில் லாரென்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை கொல்ல முடிவு செய்யும் போது ஒரு புத்தகம் ஒன்றில் எப்படி எந்த முறையில் அவர்களை கொல்லலாம்  என்று பார்ப்பார். அப்போது இந்த 13 Tzameti (french)    படத்தில் வருவது போல வட்டமாக நின்று கொண்டு துப்பாக்கியை தலையில் வைப்பது போன்ற ஒரு படம் அதில் வரும். ஓ..13 ஜமேடி என்று கொக்கரித்து கத்தியபடி அவர்களை நிற்க வைப்பார். படம் பார்த்தபோது தியட்டரில் கத்த வேண்டும் போல் இருந்தது.  இருக்காதா பின்ன...இந்த சீன இதுலதானே  உருவி இருக்கிறார் நம்ம சிம்புதேவன். ஆனால் அது த்ரில்லிங் பீசு...இது காமெடி பீசு...

இந்த பதிவு படம் வருவதற்கு முன்பே நான் எழுதி விட்டேன். அதனால் என் பதிவை படித்து...அதிலிருந்து...ச்சே இப்படி எல்லாம் பேசக் கூடாது...

சில நாட்களுக்கு முன்  13 Tzameti (french) படம் பார்த்தேன். த்ரில்லர். படம் பார்த்தது மூன்று வருடங்களுக்கு முன்பு. அதை கூகுளில் தேடி ஒரு வழியாகப் பிடித்து பார்த்தேன். மறக்க முடியாத படம். இதற்கு முன்பு விமர்சனம் பதிவு எழுதி இருந்தாலும் கிளைமாக்ஸ் எழுதவில்லை. ஆனால் அவ்வளவு தூரம் படித்து விட்டு எதோ படத்தை நானே எடுத்தவன் மாதிரி மிச்சத்தை வெள்ளித்திரையில் காண்க என்பது போல கூறியது மனதை உறுத்தியது.

எல்லாம் அனுபவம்தான். அதனால் கிளைமாக்ஸ் எழுதிவிட்டேன். 8.50 லட்சம் யூரோவை வீட்டுக்கு அனுப்பிய செபஸ்டியன் அந்தப் பணத்தை அனுபவிக்க முடிந்ததா என்பதை படத்தின் முழு கதையையும் இங்கே போய்  படித்துவிட்டு பிறகு இதை படியுங்கள்...

மு.கு.: உஸ்...அப்பப்பா..பதிவு எழுத மேட்டர் இல்லேன்னா எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு.

----------------------------------------------------------------------------------------------------பிறகு மனம் மாறி, தான் ஒரு காரை மட்டும் அடையாளம் கூற முடியும் என்கிறான். கார் எண் ஜிஆர் 1313. அதைக் குறிக்கிறார் போலீஸ் அதிகாரி.

மீண்டும் ரயில் நிலையம். ரயிலில் ஏறி வாழ்வின் வசந்தத்தை நோக்கிச் செல்கிறான். அடுத்த பெட்டியில் அரேலின் அண்ணன் இருக்கிறான். மெல்ல நடந்து வந்து செபாஸ்டியன் பக்கத்தில் உட்காருகிறான். இருவரும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். அச்சமும், வெறியும் மாறி மாறி காட்டுகிறது அவர்கள் முகம்.

அப்போது அரேலின் அண்ணன் துப்பாகியால் செபாஸ்டியனை சுட்டு விட்டு அடுத்த பெட்டிக்கு செல்கிறான்.

எதற்காக இவ்வளவு தூரம் வந்தோம், ஏன் அந்த மாபியா கும்பலில் நுழைந்து உயிரை உண்மையாலுமே பணயம் வைத்து விளையாடி வெற்றி பெற்று தப்பித்து வந்தோம் என்ற பல நினைவுகள் வயிற்றை பிடித்தபடி சாய்ந்து கிடக்கும் செபாஸ்டியன்  கண் முன் நிழலாட ரயில் ஓட்டத்தின் தாளகதியின் பின்னணியில் மெல்ல இசை மேலெழ திரை மௌனிக்கிறது.
பி.கு.: எளிதாக பதிவு எழுத ஐடியாகளில் இதுவும் ஒன்னு மக்களே...சேர்த்துக் கொள்ளுங்கள்... ஹிஹி.  

5 comments:

tamildigitalcinema said...

உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...

நாஞ்சில் பிரதாப் said...

கிளம்பிட்டாருய்யா...

அந்த வட்டமா நின்னு தலைல துப்பாக்கி வச்சு சுடறா இ.கோ.மு.சிங்கம் படத்துல மட்டுமில்ல... LUCK அப்படிங்கற இந்திபடத்துலயும் சுட்டுருப்பானுங்க...

உலக சினிமா ரசிகன் said...

சமகால அரசியலை பகடி செய்து படமெடுப்பதில் சிம்புதேவன் வல்லவன்.காப்பி அடித்தாலும் மூலத்தை சொல்லும் யோக்கியன்

ரகுநாதன் said...

@ நாஞ்சில்பிரதாப்

வந்துட்டாருய்யா...

என்னாது லக் படத்திலும் காப்பி அடிச்சுட்டான்களா...

ரகுநாதன் said...

@ உலக சினிமா ரசிகன்
பகடி செய்வதை ஏற்கிறேன். ஆனால் காப்பி அடிப்பது வேறு அதன் மூலம் inspire ஆவது வேறு...