Tuesday, January 19, 2010

கலைஞரும் தமிழுணர்வும் மானாட மயிலாடவும்...


கலைஞரின் தமிழுணர்வு கண்டுதான் அவர் மீது ஒரு பற்று எனக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் (அதாங்க சின்ன பையனா இருந்தப்போ....இப்பவும் சின்னப் பையதான்...ஆனா கொஞ்சம் பெரிய சின்னப் பையன்) எம்ஜிஆர் மீது தான் ஆர்வம் அதிகம். காரணம் சினிமா. அதில் வரும் வாள் சண்டை. அதனால் எம்ஜிஆர் மீது ஒரு இது. எது? அதாங்க ஒரு பாசம், நேசம். அப்புறம் கொஞ்சம் புத்தி வந்த பிறகு புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டேன். அப்புறம் தமிழுணர்வு ஊற்றெடுக்க ஆரம்பித்து அது தமிழிலக்கியம் படிப்பது வரை கொண்டு சென்று விட்டது. அதை விடுங்க.சமீபத்தில் இப்போதைய தலைமுறைக்கு தமிழுணர்வு இல்லை என்று ஒரு திருமணத்தில் கலைஞர் பேசியிருக்கிறார். இன்று தமிழ் பெயர் யாரும் வைப்பதில்லை. முந்தைய தலைமுறையினரின் தமிழுணர்வை பேரன், பேத்திகள் எங்கேயோ தள்ளிவிட்டனர் என்று வேதனைப்பட்டிருக்கிறார். உண்மைதான்.

கலைஞரின் தமிழ் விளையாட்டால் கவரபட்டவன் நான். அப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். ஆசிரியர் கூட்டணி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது. இவர் எதிர்க்கட்சி. அதிமுக ஆசிரியர்களைக் கண்டு கொள்ளவில்லை. அதை ஒரு நிருபர் கேள்வியாக எழுப்புகிறார். ஆசிரியர் ஸ்டிரைக்கை அரசு கண்டுகொள்ளவில்லையே? என்று கேட்கிறார். அதற்கு கலைஞரின் பதில் ஒரு வேளை ஆ-சிறியர் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்றார். இப்படி நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்.

முன்பு சேடிலைட் டி.வி. கிடையாது. புத்தகங்களும், சினிமாக்களும் மட்டுமே பொழுதுபோக்கு. அப்போது தமிழுணர்வு சாகாமல், தழைத்துக் கிடந்தது. அதுவும் புத்தகங்கள் மற்றும் திராவிட இயக்கப் பேச்சாளர்களால். இன்று நிலைமையே வேறு. எந்த டி.வி.யை பார்த்தாலும் தங்கிலீசில்தான் தொகுப்பாளர்கள் பேசுகிறார்கள். அவ்வளவு ஏன் அங்கு நேருக்கு நேர் நிகழ்ச்சிகளில் கூட பொதுமக்கள் தமிங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். அப்புறம் தமிழுணர்வு எப்படி வரும்? இதில் விதிவிலக்கு மக்கள் டி.வி. மட்டுமே.


சன் டி.வி.யை விட்டுத் தள்ளுவோம். கலைஞர் டி.வி.யில் தமிழுணர்வை அமல்படுத்தலாமே. ஏன் செய்வதில்லை.? மானாட மயிலாட என்ற மானங்கெட்ட ஒரு நிகழ்ச்சி வருகிறது. அதில் நமீதா எல்லோரையும் மச்சான்ஸ் என்கிறார். டமிலில் பேசுகிறார். "உங்க ரெண்டு பேர்க்கு எடில கெமிஸ்ட்ரி நல்லாலே" என்கிறார். கெமிஸ்ட்ரி நல்லா இருந்தா பத்திக்காதா?. அதாவது அந்த சின்னத் திரை நடிகைகளின் பின்பக்க ஆட்டமும், முன்பக்க ஆட்டுதலும் சரியில்லை என்பதை நாசூக்காக கூறுகிறார்கள். விரசத்தின் உச்சமாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை குடும்பமே உட்கார்ந்து சப்புக் கொட்டிப் பார்க்கிறது.

நான் சென்னையில் ஒரு நண்பரின் வீட்டிற்கு போயிருந்தபோது, அந்த வீட்டின் உரிமையாளர் மனைவி டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று "பாவம் அவன், பாவம் அவள்" என்று இரண்டு பெயரைச் சொன்னார். பிறகு அழாத குறையாகப் பேசினார். அப்புறம் தான் தெரிந்தது அது விஜய் டி.வி.யில் வந்த ஜோடி நெ.1 என்ற நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டவர்கள் தோல்வியைத் தாங்காமல் அழும் காட்சி என்று.கலைஞர் டி.வி.யிலேயே இப்படின்னா நாங்க என்ன இளிச்சவாயன்களா என்று சன் டி.வி. நினைத்ததோ என்னவோ...ராணி 6 ராஜா யாரு என்று ஒரு நிகழ்ச்சி உடனே வந்தது. அதாவது 6 நடிகைகள் குத்தாட்டம் போடுவார்கள். அல்லது 6 குத்தாட்ட நடிகைகள் ஆட்டம் போடுவார்கள். அதைப் பார்த்தால் கலைஞர் தோற்றுவிடுவார். அந்த அளவுக்கு ஆபாசத்தின் உச்சமோ உச்சம். கேமரா கோணம் எல்லாம் இடுப்பு மற்றும் இடுப்புக்கு கீழே, பின்புறம் குளோஸ் அப் இப்படியே அந்தப் பாட்டு முழுவதும் செல்லும்.

இதில் அதிர்ச்சி அடைய வைத்த ஒரு ஆட்டம். சம்மு என்றொரு நடிகை இருக்கிறார். (அவர் எதில் நடித்தார் என்பதை யாராவது சொல்லுங்கள்). அவர் ஆட்டம் போட வரும் முன் அவரைப் பற்றி ஒரு சிறு தொகுப்பு ஒளிபரப்பினார்கள். (பெரிய தியாகி பாருங்க...அதனால் டாகுமென்ட்ரி வேற....ங்கொய்யால...) அப்புறம் ஆடினார். ஜீன்ஸ், மேலே பிரா போல ஒரு உடை. இடுப்பை மறைக்க ஒரு மெல்லிய துண்டு போல ஒன்று. கேமரா சுத்தோ சுத்துன்னு சுத்தி இடுப்பு, மார்பு, குண்டி (வேறென்ன சொல்றது) இதைத் தான் காட்டுது. தனியாக இருந்தால் ரசித்துப் பார்க்கலாம். வீட்டில் அம்மா, அப்பா, சகோதரி எல்லாரும் இருக்கிறார்கள். எப்படி அதைப் பார்ப்பது? அப்புறம் திடீரென்று நிறுத்தினார். இடுப்பில் இருந்த துண்டை ஒரு கவர்ச்சி நடிகை அவிழ்ப்பது போல அவிழ்த்தார். பிறகு உரித்த கோழி போல இடுப்பை மட்டும் கேமிரா ஃபோகஸ் செய்தது. ஆகாகாகாஹா..... ஹிப் டான்ஸாம் அதுக்குப் பேரு. அய்யோ தாங்கலடா சாமி.....

அப்புறம் டான்ஸ் முடிந்த பிறகு அவரது நண்பர்கள், மாஸ்டர், தங்கை பேசினார்கள். இவ எப்பவும் ஆடிட்டே இருப்பா...ஐலவ்யூ செல்லம் என்று பறக்கும் முத்தம் வேறு.... அப்புறம்தான் அதிர்ச்சியே...அவளோட அப்பாவும் அங்கேதான் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருந்திருக்கிறார். அடக் கருமமே....இதில் அவர் பெருமை பொங்கப் பேசுகிறார் தன் மகளின் காமக் களியாட்டத்தைப் பற்றி. நல்ல அப்பன்...நல்ல மகள்....
AXN டிவியில் ஒரு நிகழ்ச்சி வரும். so you think you can dance? என்ற நிகழ்ச்சி. அதில் மொத்தமே 2 நிமிடம் தான் ஆடுவார்கள். அவர்கள் உடை மேற்கத்திய உடைதான். ஆனால் ஆட்டத்தில் ஒரு சின்ன ஆபாசம் கூடத் தெரியாது. அதைப் பார்த்துதானே இவர்கள் இதைக் காப்பி அடித்து எடுக்கிறார்கள். பிறகு எதற்கு இவ்வளவு ஆபாசம்.?

விசயத்துக்கு வருவோம். இப்படி24 மணி நேரமும் டி.வி.களில் ராஜா 6 ராணி யாரு? மானாட மயிலாட என்றிருந்தால் இருக்கும் கொஞ்சம் தமிழுணர்வும் பறந்து விடும். அப்புறம் எப்படி தமிழுணர்வு வரும் இந்தத் தலைமுறைக்கு?

10 comments:

அகல்விளக்கு said...

அப்படிப்போடு அரிவாள...

மானாட மயிலாட மார்....

சரி விடுங்க...

ஆபாசத்தின் உச்சம்,
தொலைக்காட்சி ஆக்குகிறது எச்சம்...

Anonymous said...

'KUNDI' is not an obnoxious word. In Chennai, we say 'manai palakai' for the small seat. In villages, hey callit 'Kundi Palakai'. Maanaada Mayilaada and kundiaada is very sexy.

vivekam said...

கலைஞர் வழி தனி வழி ஊருக்கு மட்டும் தான் உபதேசம்.
ஹிந்தி படிக்காதே என்று கூறுவார்.
கனிமொழிக்கு 9 மொழி தெரியும் என்பார்.
தயானிதிமாறனுக்கு ஹிந்தி தெரியிரதனால
டில்லிக்கு அனுப்பிவைக்கிறேன் என்பார்.
தமிழ் நாட்டை குட்டிச்சுவராக்கியதில் கலைஞருக்கு முதல் இடம்.

ரகுநாதன் said...

thanx vivekam

Barari said...

hindi padikkiren endru sollum ungalai yaar thaduththaarkal.etho kalaizar sol kettu nadappavarkal pol.hindi padiththu irunthaal bill gates aki iruppeerkalo?

ரகுநாதன் said...

மொட்ட தலைக்கும் முட்டி காலுக்கும் முடிச்சு போடாதீங்க barari :)

திவியரஞ்சினியன் said...

அருமையாக எடுத்து சொல்லியுள்ளீர்கள்....

எத்தனை காலந்தான் தூங்குவது? விழித்தேயாக வேண்டும்!!!!
நம் சமூகம் விழிக்கும் காலம் தொலைவில் இல்லை.

ரகுநாதன் said...

விழிப்பா நம் இனத்துக்கா ....நல்ல நகைச்சுவை .....:)
வருகைக்கும், உங்கள் பதிவில் இணைத்தமைக்கும் நன்றி திவியரஞ்சினியன் :)

ராஜ நடராஜன் said...

நேரா கலைஞர் தொலைக்காட்சிக்குப் போயிடலாம் ஏனைய விமர்சனங்களை தவிர்த்து.தனது தமிழால் தமிழகத்தையே கட்டிப்போட்ட கருணாநிதியால் மக்கள் தொலைக்காட்சி மாதிரி சமரசம் செய்து கொள்ளாமல் தமிழை தக்க வைத்துக் கொண்டிருந்திருக்க முடியும்,வியாபாரம்-பணம் மட்டுமே இலக்காக இல்லாமல் இருந்திருந்தால்.

செலவீனங்களை சமாளிக்க வேண்டும் என்று வியாபார நோக்கில் பார்த்தால் கூட வியாபார நிகழ்வுகளுடன் தமிழையும் பக்கத்தில் உட்கார வைத்து அழகு பார்த்திருந்திருக்க முடியும்.முன்பு கலைஞரை நேசித்து இப்பொழுது அவரை நம்பாத கூட்டம் ஒன்று தமிழகத்தில்(தெளிந்து) உருவாகிறது என நினைக்கிறேன்.

கொசுறாக ஒன்று!நமீதா தமிழ் பேசுவது ஆவலோ அல்லது வியாபார தக்க வைத்தலோ பாராட்ட வேண்டிய முயற்சி அது.பதிலாக நமிதா காட்டலை காய்ச்சுவதில் நேர்,எதிர் விமர்சனங்களை வைக்கலாம்.சரியா சொல்லிக்கொடுத்தா புடவையிலும்,சல்வாரிலும் அழகு என்பது போட்டிருக்கும் படத்தில் தெரிகிறது.அப்புறம் கவர்ச்சி என்பதை சமுதாயத்தின் பிரதிபலிப்பு என்றும் எடுத்துக் கொள்ளலாமோ?

நாம வட இந்தியாவில் போய் இந்தி பேசினாலும் தென்னிந்திய உச்சரிப்பு பலருக்கும் வந்து விடுவது இயல்பு.இப்பொழுதும் இந்தி சிரிப்பு நடிகர் மெகமூத்தின் மதராஸி இந்தி நம்மைக் கேலி செய்வது.அடிச்சுப் போட்டாலும் லக்னோ இந்தி தென்னக நாக்கில் ஒட்டாது.அதே வடக்கிலிருந்து தெற்கு பயணம் செய்தாலும்.

Anonymous said...

சனங்களுக்கெல்லாம் டிவியை இலவசமா கொடுத்து பார்க்கவைக்கிறாரு கலைஞர். சுயமாக என்ன இருக்கு எல்லாம் வெளிநாட்டுக்காரங்களை காப்பி அடிச்சு குத்தாட்டம் போடுராங்க. போனவாரம் கூட பாசத் தலைவருக்கு பாராட்டு.. சாரி குத்தாட்டு விழா நடத்துனாங்க.. சினிமா நடிகர்களை வைத்து அரசியல் பண்ணுறாரு. தமிழ்நாட்டின் சாபக்கேடு கலைஞர்.