Monday, January 18, 2010

ஜுனியர் விகடன் + திருமாவளவன் = முள்வலி பார்ட்-2 ?
கடந்த ஆண்டு ஜூனியர் விகடன் படிக்கும் போதெல்லாம் புல்லரிக்கும். ஈழப் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதில் வரும் செய்திகளும், படங்களும், பேட்டிகளும் அதை வாங்க வைத்தன. குறிப்பாக தலைவர் பிரபாகரன் படம் போட்ட எந்தப் பத்திரிகையானாலும் வாங்கித் தொலைத்தேன். இதெல்லாம் இணைய தளங்களில் வரும் செய்தி, ஆய்வுக் கட்டுரை என்று எல்லாவற்றையும் படித்துவிட்டு தாங்களே செய்தியாளர்களை அங்கே அனுப்பி போரின் உண்மை நிலவரத்தைக் கண்டு வந்தது போல எழுதுகிறார்கள் என்று பிறகுதான் தெரிந்தது.போர் முடிந்துவிட்டது. ஈழம் தகர்ந்துவிட்டது. ஆனால் பத்திரிகைகளின் சர்குலேசனை அப்படியே வைத்திருக்க அவ்வப்போது ஈழம் என்ற ஊறுகாய் தேவைப்படுகிறது. தமிழ் மசாலாப் படங்களுக்கு ஐட்டம் நம்பர் குத்தாட்டப் பாடல் தேவைப்படுவது போல தமிழ் வாரப் பத்திரிகைகளுக்கு ஈழத் தமிழரின் இன்னல்கள் தேவை. செய்தியை செய்தியாக அளித்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதை ஒரு திரைக்கதையாகத் தருவதைத்தான் தாங்க முடியவில்லை.

ஆனந்த விகடனைப் பொருத்தவரை பிரபாகரன் இருக்கிறார். ஆனால் ஜூ.வி.யைப் பொருத்தவரை தலைவர் இல்லை. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து இருக்கிறார் என்பார்கள். விசயத்துக்கு வருவோம்.

திருமாவளவன் தமிழ் உணர்வு ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிந்ததுதான். காங்கிரஸை ஒழிப்போம் என்பார். அப்புறம் அதன் பின்னாலேயே நிற்பார். அது சரி அதை ஏன் குறை சொல்ல வேண்டும்? இந்தியாவில் ராஜபட்சே பரம எதிரி. இலங்கைக்குச் சென்றால் கூடிக் குழாவும் அளவுக்கு நண்பர். முதலில் நான் எழுதிய ஒரு பதிவில் திருமாவளவனை யாரும் திட்ட வேண்டியதில்லை என்று ராஜபட்ச-திருமாவளவன் சந்திப்பு பற்றி்க் கூறினேன். ஆனால் இப்போது அதை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. இவர் விருப்பத்துக்கு இலங்கை செல்கிறார் அமைச்சர் இறப்பில் கலந்து கொள்கிறார். பிறகு பசில், கோத்தாவுடன் பேசி தலைவரின் பெற்றோரை மீட்கப் பேசுகிறார். ஒரு வேளை இவரும்..... வேண்டாம். எதற்கு வீண் கற்பனை.

முதலில் எம்.பி.கள் குழுவுடன் இலங்கை சென்று வந்ததை பேட்டியாக ஜூ.வி.யில் கொடுத்தார். பிறகு அதையே கொஞ்சம் தனது எழுத்தாற்றலை வைத்து கதையாக எழுதினார். கொஞ்ச வாரம் அதை தொடராக எழுதினார்கள். பிறகு அதை முள்வலி என்ற பெயரில் புத்தகமாக அச்சடித்து விற்பனை செய்கிறார்கள். ஈழம் தொடர்பாக இன்னுமொரு வியாபார புத்தகம். இன்னும் கொஞ்ச நாளில் சுய முன்னேற்ற நூல்கள் வியாபாரம் போல் ஈழம் தொடர்பான புத்தக வியாபாரமும் செழிக்கும் போல் இருக்கிறது. திருமாவளவன் போன்றவர்கள் இருக்கும்போது என்ன கவலை?


இப்போது தலைவரின் தந்தை மரணத்துக்குச் சென்று வந்த பிறகு அங்கு தலைவரின் தாயிடம் பேசியதை பேட்டியாகக் கொடுக்கிறார் ஜு.வி.க்கு. முதலில் தலைப்பைப் பாருங்கள். தம்பி உயிரோடு இருக்கிறார். கனடாவில் சந்திப்பார். இதைப் பார்த்தவுடன் நானே ஜு.வி.யை வாங்கி விட்டேன். கேள்விகளைப் படித்தால் நன்றாக இருக்கிறது. ஆனால் பதில். அங்கேதான் இவர்களது விசமம் இருக்கிறது. ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்தால் கேள்வியை முன்னரே கொடுத்து பிறகு அதற்கு ஒரு தேர்ந்த எழுத்தாளரைப் போல வர்ணனையுடன் பதில் எழுதிக் கொடுத்தது போல இருக்கிறது. பேட்டி என்றால் இப்படித்தான் இருக்குமா திருமாவளவன் ஐயா?

பிறகு கடைசிக் கேள்வி முடிந்ததும் அடுத்த இதழி்ல் தொடரும் என்று ஒரு வரி வருகிறது. அதற்கு அடுத்த வாரமும் வாங்கினேன். அதிலும் அடுத்த இதழில் தொடரும் என்று வருகிறது. இப்போது முள்வலி என்ற தொடர் முடிந்துவிட்டது. இப்போது பேட்டி என்ற பெயரில் மீண்டும் ஒரு தொடர் திருமாவளவனை வைத்து வருகிறது. இந்த வாரமும் அடுத்த இதழில் தொடரும் என்று வரும் என நினைக்கிறேன். ஆக, இது முள்வலி பார்ட்-2 என்ற பெயரில் மீண்டும் புத்தகமாக வெளிவருவது உறுதியாகிவிட்டது.

எனவே நாம் எல்லாம் இந்த வியாபாரத்தைச் செழிக்கச் செய்ய வேண்டுமாய் தமிழ் கூறும் நல்லுலகைக் கேட்டுக் கொள்கிறேன்.

டிஸ்கி: விகடன் பற்றி தவறாக எழுதாதே என்று என் நண்பர் அறிவுறுத்தினார். தவறாக எதுவும் இல்லையே. சரியாகத் தானே எழுதுகிறேன் என்றேன் நான்.

16 comments:

வரவனையான் said...

டிபிக்கல் வாசகனின் எள்ளல், அருமை நண்பா

வரவனையான் said...

டிபிக்கல் வாசகனின் எள்ளல், அருமை நண்பா

வரவனையான் said...

டிபிக்கல் வாசகனின் எள்ளல், அருமை நண்பா

Anonymous said...

பிரபாகரன் தாயாரின் கண்ணீரும் விகட விடுப்பும்.

http://bit.ly/7fQWFW

venkat said...

திருமாள்வளவன் இலங்கை செல்வதற்கு முன் தெளிவாத்தான் இருந்தார்.
இலங்கை சென்று வந்து பின் .....அவர் ........
சரி விடுங்க அவரும் கட்சி நடத்தனுமில்லே?

ரகுநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே

சக்திவேல் said...

எப்பொழுது இலங்கைத்தமிழ்ர்கள் துயரங்களை தொடராக போட்டார்களோ அப்பொழுதே அதை படிப்பதை விட்டுவிட்டேன். இது என்ன கதையா? எதிர்பார்ப்புகளை ஏற்றி வியாபாரம் பன்னுவதற்கு? திருமாவுக்கு நிறைய பின்னூட்டங்கள் மூலம் சொல்லியாயிற்று இன்னும் தமிழர்கள் துயரங்களை வைத்து காசு பான்னும் வியாபாரத்தை விடவே மாட்டேன் என்கிறார். நான் விகடனில் முள்வலியை அப்படியே படிக்காமல் தான்டி விடிவேன்.

ரகுநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வரவனையான் :)

ரகுநாதன் said...

@ venkat

ஆமாம் நீங்கள் சொல்ல வருவது சரிதான். :)

சங்கர் said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

ரகுநாதன் said...

வாங்க சக்திவேல்...நானும் ஜூ.வி. வாங்குவதை நிறுத்திவிட்டேன். அதுவும் ஈழம் தொடர்பாக ரஜினி படம் ரேஞ்சுக்கு பில்ட் அப்பு கொடுத்த போஸ்டரை பார்த்தாலே எரிச்சல்வருகிறது.

ரகுநாதன் said...

வாங்க சங்கர்...அரசியலில் மட்டும் அல்ல அரசியல் பத்திரிகையிலும் இதெல்லாம் சாதாரணம் தான். ;)

sleva said...

நண்பா இப்படி எல்லாம் தாறு மாறா எழுதினா அப்புறம் விகடன் குட் பிலாக்ஸ்ல உங்க ப்ளாக் வராது பாத்துக்குங்க...

ரகுநாதன் said...

@செல்வா....

ஹிஹிஹிஹ் ஹிஹிஹிஹி....
நமக்கும் அதுக்கும் என்ன லிங்க் பாஸு? அதப்பத்தி நமக்கு என்ன கவலை? நான் என்ன வியாபாரியா?

4தமிழ்மீடியா said...

நண்பரே!
உங்கள் பதிவினை இங்கு மீள்பிரசுரம் செய்துள்ளோம். தங்கள் மிக் மடல் முகவரி இல்லாத காரணத்தால் முன் அனுமதி பெற முடியவில்லை. மன்னிக்க!
நன்றி
http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-20-00-21-36/2009-05-01-01-53-36/5098--2-

lallu said...

ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், நக்கீரன் இந்த மூணு பத்திரிகைக்கும் அறிவே இருக்காதா. நீங்க ஈழத்தமிழர்களுக்கு எவ்வளவு தர்ம சங்கடங்கள உண்டு பண்றிங்கன்னு தெரியுமா. இதுலயுமா வியாபாரம். நீங்க எழுதி கெடுக்கிறிங்க. சிலர் எழுதாம கெடுக்கறாங்க. உங்களுக்கு அவனுங்க மேல்