Friday, October 23, 2009

இதாண்டா பகுத்தறிவு!


இது நேற்று நாளிதழ்களில் வந்த தமிழ்நாடு அரசின் விளம்பரம். மேலே கலைஞர் மஞ்சள் துண்டுடன். இதென்ன அதிசயமா? இல்லை. ஆனால் காப்பீட்டுத் திட்ட விளம்பரம் இது. அதில் எமன் வருகிறான் பாசக் கயிறுடன். கலைஞர் காபாற்றுகிறாராம்.


நீதிக் கட்சி - திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் - பெரியார் - அண்ணா - கலைஞர் - கடவுள் இல்லை - கடவுளை நம்புபவன் காட்டு மிராண்டி - ஒன்றே குலம் ஒருவனே தேவன் - ராமன் ஆரிய மாயை - கோயில் கூடாது என்றேன் - மஞ்சள் துண்டு - புத்தர் - மருத்துவ குணம் - இந்து என்றால் திருடன் - பா.ஜ.க - பண்டாரங்கள் - கூட்டணி - ராமன் புராணம் - கட்டுக் கதை - மேற்கோள்கள் காட்டுவேன் - விவாதிக்கத் தயாரா - சேது - காங்கிரஸ் பல்டி - காங்கிரஸ் - ஜனதா - பா ஜ க - காங்கிரஸ் - கிருஷ்ணா நதி - சாய் பாபா - தமிழ் பேசினோம் - கடவுளை நம்புகிறேனா என்பதல்ல அந்த கடவுள் ஏற்கும் வகையில் செயல்படுகிறேனா என்று பார் - தமிழ் தமிழ் தமிழ் - புலி - சகோதர யுத்தம் - போர் - உண்ணாவிரதம் - பேரழிவு - இப்போ அமைதி - சிங்களம் - (அ)சிங்கம் - ராஜபக்சே - மகிழ்ச்சி - பணம் - டி.வி - இலவசம் - தேர்தல் - வெற்றி - ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி - தயாநிதி - மானாட மயிலாட - தமிழ் விளையாட - காவிரியாறு - பாலாறு - பெரியாறு - உண்ணாவிரதம் - கண்டன கூட்டம் - காதுல பூ - இலவசம் - ராமன் பொய் - கிருஷ்ணன் பொய் - கடவுள் பொய் - ஈழம் பொய் - புராணம் பொய் - அதில் வரும் காலன் மட்டும் மெய் - கலைஞர் காப்பீட்டு திட்டம் - விளம்பரம் - பதவி மெய் - இதாண்டா பகுத்தறிவு!

12 comments:

Vijayan said...

thani thamilnadu,dravidanadu illavittal sudugadu,maanila suya aatchy,moonu padi,uravukku kai koduppom,vendumbothu mootharinger illavittaal kullugapattar iheyellam vittuvittirey.VIZZY.

நாஞ்சில் பிரதாப் said...

சரியா சொன்னீங்க..ரகு,

அவங்க தேவைக்கு எது பண்ணாலும் அது சரிதான். சரியான சுயநலவாதிகள், பச்சோந்திகள்.

Varadaradjalou .P said...

காலத்திற்கு ஏற்ப மாறுகிறார்

கேவலம் பணத்திற்காகவும் பதவிக்காகவும் இந்த வயதில். இன்னும் எவ்வளவு மாறுதல்கள் இருக்கிறதோ?

ரகுநாதன் said...

வாங்க விஜயன்

அதெல்லாம் மறந்துட்டேன். நீங்க சொல்லிட்டீங்க.. நன்றி :)

ரகுநாதன் said...

மிகவும் சரி பிரதாப் :)

venkat said...

அட்ரா சக்கை! அட்ரா சக்கை!
அப்படி போடு ....

ரகுநாதன் said...

வாங்க வரதராஜுலு

மாற்றம் ஒன்றுதானே மாறாதது? :)

ரகுநாதன் said...

@ venkat

thanks :)

thamizhthesiyan said...

என்ன தோழர் மீண்டும் புரியாத ஆளாக இருக்கிறீர்! மாற்றான் தோட்டத்து(ஆத்தீகம்) மல்லிகைக்கும் மணம் உண்டு என சொன்ன அண்ணாவின் வேத வாக்கு உமக்கு புரிய வில்லையா? காசு பதவி என்றால் அவ்வப்போது அதை எப்படியாவது உபயோகித்து கொள்வதில் என்ன தவறு? வெறும் மஞ்சள் பையோடு ரயிலேறி வந்தவரிடம் எப்படி இவ்வள்வு சொத்து?
1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை..
இதை எடுத்து பேசினால் செயலலிதாவை இழுப்பார்கள்..ஆமாம் ஊர் நாட்டில் செய்யாததையா என் தலைவர் செய்துட்டார்?..என .. இந்தி தேசியம் என்பது இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுமாறே கட்டாய படுத்துகிறது.. அதுவே இந்த கொள்ளை ..கொலைகார கூட்டங்களுக்கு வசதியாக போய்விடுகிறது இதை முதலில் மாற்ற வேண்டும்

நாஸியா said...

அவரு ஊர ஏமாத்தி பொழைக்கிறது வெட்ட வெளிச்சமாயிட்டு, அவ்வளவு தான்!

ரகுநாதன் said...

லிஸ்ட பாத்தா "அனுமாரு வாலு" மாதிரி இருக்கு தோழர் ஹி ஹி ஹி :)

ரகுநாதன் said...

வருகைக்கு நன்றி நாஸியா :)