Wednesday, October 7, 2009

யாருங்க அந்த போட்ஸ்வனா தமிழர்?




நேற்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது...அது ஒரு தானியங்கி தகவல். நாம் வலைப்பதிவுக்கு புதிதாக இருந்த போது அடிக்கடி ஹிட்ஸ் செக் செய்வோம். (இப்பவும்தான்) இன்றைக்கு எத்தனை பேரு தங்களது பொன்னான நேரத்தை செலவு செய்து நம்ம மொக்கை காவியங்கள படிகிறாங்க என்று ஆவலோடு பார்ப்போம். சரி, சரி...கோவப் படாதீங்க பார்ப்பேன்.

போட்டி தேர்வுகளுக்கு படித்த போது அட்லசும் (atlas) கையுமாக இருப்பேன். அந்த அட்லசை இப்போ (oriental longman) எடுத்து பார்த்தா கண்ணனுக்கு தெரியாத குட்டி குட்டி தீவுகளில் இருந்து மிச்சிப்பி, றோனே, றினே நதிகள் எங்கே ஓடுது, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள குடி குட்டி நாடுகளோட தலை நகரம், land locked country என்று ஏகப்பட்ட இடத்துல கோடு கிழிச்சு, குறிப்பு எழுதி, எந்த நாட்டுக்கு எது எல்லை என்று தெரியாத அளவுக்கு இருக்கு.

ஆபிரிக்காவில் எங்கே வைரம் அதிகம் கிடைக்கு, சூயஜ் கால்வாய் எப்போ எதுக்கு தோண்டினாங்க, என்று தகவல், தகவல்....தகவல்தான்,

இந்தியர்களை பிடிச்சுட்டு போன சோமாலி திருட்டு பசங்க பற்றி படிச்சுட்டா உடனே அட்லஸ் எடுத்து எங்கே அந்த கடல், அதுக்கு பக்கத்துல என்ன நாடு, என்ன நதி, அந்த கடலுக்கு எந்த நதி ரூட்டு போட்டு கொடுக்குது....அங்க யார் president, அவிங்க சோத்துக்கு என்ன பண்றாங்க..இப்படி சொல்லிட்டே போகலாம்...

அதே மாதிரி ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுக்கும் போயிருக்கேன்...அட அட்லசுலதாங்க... அதனால அங்கேயும் கொஞ்சம் தெரியும். (எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னால் அது தலைக்கனம். எதோ கொஞ்சம் தெரியும் என்று சொன்னால் அதுக்கு பேரு என்ன?)

ஆப்பிரிக்காவுல இருக்கும் போட்ஸ்வானா என்ற நாட்டில் இருந்து உங்கள் வலைப்பதிவை முதன்முறையாக ஒருவர் பார்த்துள்ளார் என்ற நற்செய்தியை அந்த மின்னஞ்சல் சொன்னது. அது neoworx.net இணைய தலத்தில் இருந்து வந்தது.

நான் என்ன சொல்ல வரேன்னா... அந்த முகம் தெரியாத நண்பருக்கு (சரி தோழிக்கு) நன்றி.

வந்தவங்கள வாங்க என்று வரவேற்பதுதானே நம் பண்பாடு....

6 comments:

பின்னோக்கி said...

அடக்கடவுளே இந்த டெக்னிக் தெரியாம ஒரு பதிவு போடுறது மிஸ்ஸாயிடுச்சுங்க...

எந்த ரூம்ல உட்கார்ந்து யோசிக்குறீங்க.. :).

//எதோ கொஞ்சம் தெரியும் என்று //சொன்னால் அதுக்கு பேரு என்ன?
எங்க ஊருல அரைவேக்காடுன்பாய்ங்க :)..

கலையரசன் said...

வலைப்பூ அறிமுகத்துக்கு நன்றி ரகு!

ரகுநாதன் said...

நீங்களும் பதிந்து கொள்ளுங்கள் கலை :)

ரகுநாதன் said...

@ பின்னோக்கி

no. 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய். :)

ரகுநாதன் said...

@ பின்னோக்கி

//எங்க ஊருல அரைவேக்காடுன்பாய்ங்க :)..//

நான் கால் வேக்காடுங்க :)

துபாய் ராஜா said...

நல்லதொரு தகவல் நண்பரே...