Tuesday, October 6, 2009

தலைவர் இருக்கின்றார்- மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கப்பா !
ஒரு இணையத்தளத்தில் ஒரு கட்டுரை. அதை கொஞ்ச நாள் முன்பு வேறொரு இணைய தளத்தில் படித்தேன். படித்தவுடன் எழுந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை. ஏன் எதற்கு என்று விளக்கப் போவதில்லை.

இப்போதுதான் ஓரளவுக்கு மறந்து நிற்கிறோம். மீண்டும் வருவார்.. வந்து விட்டதைப் பிடிப்பார் என்ற ரீதியில் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையாகவே இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சி தான். ஆனால் இதுவரை கிடைத்த ஆதாரங்களை வைத்து உக்காந்து யோசிக்கும் போதும் மீண்டும் வர வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

அப்படியே வருவதாக இருந்தாலும் இவர்களின் அவசரத்துக்கு அவர் வரமாட்டார். இன்னும் 5 ஆண்டு காலம் ஆகலாம். காரணம் ஆட்சியில் இருப்பது நெ.10 ஜன்பத், புதுதில்லி. இதோ பார் இங்கதான் இருக்கிறேன் என்று அவர் தலையைக் காட்டிவிட்டால் மூன்று லட்சம் பேர் கதி அவ்வளவுதான் என்பதை ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறார்களோ தெரியவில்லை.

"எங்கட தமிழ் மக்களுக்கு ஒரு சிக்கல் உண்டு. யாராவது அவங்களுக்காக போராட வேணும்...அவரை தெய்வமெண்டு போற்றி பின்னால் நிற்க வேணும் என்பதே. அப்படியில்லாமல் எல்லாரும் சேர்ந்து போராட வேணும்' என்று அவர் கூறியபடி மேற்கொண்டு ஒருங்கிணைந்து போராடுவதே சிறந்தது.

அல்லது குறைந்தபட்சம் முள்வேலியில் இருப்போரை வெளியே கொண்டுவர ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகள், செயற்றிட்டங்களை வகுத்து எழுதினால் அவ்வாறு உதவ முன் வருவோருக்கு அது பயனுள்ளதாக இருக்கும். (ஆனா எப்படி சொன்னாலும் செய்தாலும் இரண்டாம் ஹிட்லர் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது வேறு விஷயம்).

//ராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27-ம் தேதி ‘வீரவணக்க’ தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலைவருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்!’ என்கிறார்கள் உறுதி குறையாமல்.//

இதைப் படித்தபோது மனதில் எழுந்த கேள்வி இதுதான்...
மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கப்பா...

இதைச் சொன்னால் நான் ஏதோ தமிழின விரோதி என்று கூறலாம். ஆனால் நானும் நின்றிருக்கிறேன் மனிதச் சங்கிலியில். பங்கெடுத்திருக்கிறேன் உண்ணாவிரதத்தில். எழுதியும் இருக்கிறேன் என் பதிவில்.

6 comments:

vivekam said...

தமிழனுக்கு விரோதி ஆளும் மத்திய, மாநில அரசுகளோ,
மளயாழத்தானோ இல்லை, தமிழனுக்கு விரோதி தமிழன் தான்.
தலைவர் உட்கார்கிறார். வருகிறார், இருக்கிறார், வருவார்
என்று உசுப்பேத்தி, உசுப்பேத்தி, நம்ம இனத்தையே அழிச்சிட்டானுக,
இன்னுமா விடவில்லை?

ரகுநாதன் said...

@vivekam

இதோ இங்கே வரட்டும்...அல்லாரையும் கைமா பண்ண போறோம்...இதோ அங்கே வந்தானுகன்னா அதோட காலி என்று பேனா போன போக்குல கட்டுரை எழுதினாங்களே போன வருடம் இதே நேரம்...வேலை வெட்டி எல்லாம் விட்டு எந்நேரமும் நெட் பாத்துட்டு இருந்தோமே...என்னாச்சு...கடைசில...

Anonymous said...

ஒன்னும் ஆகல...

சுலைமான் said...

என்னடா,
இவனுக மறுபடி தல இருக்கீண்ணு கதைக்கிறானுக.அப்பிடித் தல இருந்திச்சி
எண்ணா டிவியில காட்டின தல யாரோட? இவங்க கொப்பன் தலயா?
வந்து இனி என்ன பண்ணும் வெறும் தல. நீங்க எல்லா பயலுகளுமே தலயைச் சாட்டி இம்மட்டு நாளும் ஏமத்திப்பூட்டீங்கடா தலயையும் முடிச்சுப்போட்டீங்க.நீங்க வெளிநாட்டில வெள்ளையும் சொள்ளையுமா வாழுறதுக்கும் றேடியோ வைச்சு உழைக்கவும் டிவி வச்சிபிழைக்கவும் பேபபர் நடாத்தவும் தல இருக்கெண்ணு கடுப்பேத்தாதேங்கடா,
கருமாதிப்பயலுகளா.

ரகுநாதன் said...

@சுலைமான்
ரொம்ப திட்டாதீங்க பாஸ்...

பரமேஷ் said...

நெருடல்.காமில் அந்த கட்டுரையை எடுத்துவிட்டார்கள்...