Sunday, October 4, 2009

உளியின் ஓசை- கலைஞரின் நமக்கு நாமே திட்டம்
முன் குறிப்பு: இது ஏதோ அரசியல் உள் நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு அல்ல.


கோயிலை இடித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக....

இந்த புகழ் பெற்ற வசனத்தை நான் பல முறை என் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சொல்லி இருக்கிறேன். இந்த வசனம் வந்த படம் வெளியான ஆண்டில் தான் என் அப்பாவே பிறந்துள்ளார். அப்படின்னா நான் இந்த வசனத்தை சன் டி.வியில் பார்த்துதான் ரசித்தேன் என்று நீங்கள் நம்பலாம்.

விடயம் இதுதான்...அப்போது வந்த வசனத்தை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பின்பு ஒரு சின்ன பையன் (நாந்தாங்க) மனப்பாடம் போல சொல்கிறான் . அந்த அளவுக்கு அந்த பேனாவில் வலு இருந்தது. தீப்பொறி பறந்தது. அரை நூற்றாண்டு கழித்தும் கூட ஒரு நவ யுக வாலிபனை கட்டிபோட்ட எழுத்துக்கு சொந்தக்காரர் அப்படியே இருந்திருந்தால் என்னைப் போல எத்தனையோ வாலிபர்கள் அவரது எவ்வளவோ வசனத்தை சொல்லி இருப்பார்கள்.

ஆனால் தமிழகத்தின் தலை எழுத்துக்கு அவர் மட்டும் விதி விலக்கா என்ன ?
அவரு திசை திரும்பினார். அரசியல் பரம பதத்தில் ஏறினார். உச்சம் சென்றார். பிறகு இறங்கினார். அப்புறம் ஏறினார். ஆனால் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர் அல்ல அவர். அதனால் அதில் ஒரு கை இதில் ஒரு கை வைத்து இருந்தார்.

தொடர்ந்து சினிமாவுக்கும் அரசியலுக்கும் வசனம் எழுதினர். மக்கள் அவரை கொண்டாடினார்கள். பிறகு அரசியல் வசனம் அதிக வெற்றியை கொடுக்கவே நிழல் உலகமான சினிமா வசனத்தை குறைத்துக் கொண்டார். இருந்தாலும் எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி உண்டு. "இரும்பு புடிச்சவன் கையும் பேனா புடிச்சவன் கையும் சும்மா இருக்காது"

அதனால் அப்பபோ வசனம் எழுதினார். கண்ணம்மா என்ற ஒரு படத்துக்கு வசனம் எழுதினார். அதில் ஒரு வசனம் உங்களுக்கு நினைவு உண்டா? எனக்கு இல்லை.

பராசக்தி படத்தை மட்டும் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன். அதுவும் அந்த கோர்ட் சீன்.

கொஞ்ச நாளுக்கு முன்னால் மீண்டு அவர் பேனாவில் இருந்து கிளம்பிய ஓசை ஒரு சிற்பியின் கையிலிருக்கும் உளியின் ஓசை போல ஒலித்தது. அது படமாகவும் வந்தது. சினிமா கொட்டாயை விட்டும் போனது. (ஏப்பா தம்பி, இந்தப் படம் எந்த கொட்டாயில ஓடுது என்று டீ கடையில் ஒரு பெரியவர் கேட்டது இன்னும் நினைவு இருக்கு)

உளியின் ஓசை என்ற அந்தப் படத்தில் பராசக்தியை விட காலம் கடந்து நிற்கும் வசனத்தை எழுதியதற்காக ஒரு விருது கொடுக்கலாம் என்று எவன் அவருக்கு யோசனை சொன்னான் என்று தெரியவில்லை.

அவரும் சிறந்த திரைப்படம் நடிகர், நடிகை, இசை அமைப்பாளர் என்று லிஸ்ட் படித்து ஓ.கே. செய்து விட்டு... நமக்கு எதுவும் இல்லையே என்று நினைத்தாரோ என்னவோ...அதனால் அவருக்கு ஒரு யோசனை வந்தது...யார் கொடுத்தால் என்ன...விருது விருதுதானே...என்று முடிவு செய்தார்.

இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற உரையாடல் பராசக்தி படத்தையே விஞ்சிய காரணத்தால் நமக்கு நாமே திட்டப்படி தனக்கு தானே விருதை அளித்துக் கொள்கிறேன் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டார் மனதுக்குள்.

அப்புறம் என்ன.... சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது உளியின் ஓசை படத்திற்க்காக அவருக்கு வழங்கப் படுகிறது....டிங் டிங் டிங் டிடடிங்.....

சின்னப் பையன் சந்தேகம்: எல்லாருக்கும் அவர்தான் விருது கொடுப்பார்...அவருக்கு யார் கொடுப்பாங்க....அப்படின்னா அந்த விழாவுல chief guest அவரா இல்ல வேற ஆளா? அப்படியே அந்தப் படத்தில் இருந்து ஒரே ஒரு வசனம் மட்டும் சொன்ல்லுங்க...

ஐயோ... நான் அடிச்ச தாங்கமாட்டே...நாலு மாசம் தூங்கமாட்டேன்னு யாரோ பாடறா மாதிரி இருக்கே....

13 comments:

மகேஷ் said...

veetukku auto anuppanuma? :)

பின்னோக்கி said...

ஆட்டோ அந்த காலம்..சுமோ இந்த காலம் :)

Krishna Prabhu said...

கலைஞர் டிவிக்கு சினிமா ரைட்ஸ் கொடுக்காததால தான் சுப்ரமணியபுரம் படத்துக்கு விருது கொடுக்கலன்னு கேள்விபட்டேன்....

ரகுநாதன் said...

வாங்க மகேஷ்

//veetukku auto anuppanuma? :)//

அதனால்தான் வாசப் படியையே பாத்துட்டு இருக்கேன் :)

ரகுநாதன் said...

வாங்க கிருஷ்ணா...

//கலைஞர் டிவிக்கு சினிமா ரைட்ஸ் கொடுக்காததால தான் சுப்ரமணியபுரம் படத்துக்கு விருது கொடுக்கலன்னு கேள்விபட்டேன்..//

நீங்க என்ன இப்படி ரகசியத்தை எல்லாம் போட்டு உடச்சுடீங்க... :)

நல்ல படத்துக்கு எப்படி விருது கொடுப்பாங்க :)

ரகுநாதன் said...

வாங்க பின்னோக்கி,

//ஆட்டோ அந்த காலம்..சுமோ இந்த காலம்//

சைகிளுக்கே நான் தாங்க மாட்டேன்...சுமோவா...

அஹோரி said...

புரியாத ஆளா இருக்கீங்க.

மொத்தமா ஒரு ஊர்ல நிலத்த வளைக்கனும்னா ... இந்த படத்த எதாவது ஒரு தியேட்டர்ல போடுறாங்க ...
மக்கள் ஊர காலி பண்ணினதும் , அந்த ஊர பிளாட் போட்டு வித்துடுறாங்க.

இதெல்லாம் பிசினஸ் ட்ரிக்.

ரகுநாதன் said...

வாங்க அஹோரி....

அட இதுல இப்பூடி ஒரு ட்ரிக் இருக்குதா....சூப்பரப்பு... :)

கலையரசன் said...

அடுத்த வருஷம் சாம் ஆன்டர்சன் நல்லா ஆடுனத்துக்கு விருது கொடுப்பாங்களா பாஸ்?

ரகுநாதன் said...

வாங்க கலையரசன்

நல்லா கேக்கறாங்கையா டீடயிலு...கிடைச்சாலும் கிடைக்கும்...அந்த லிஸ்ட் கடைசி நேர மாறுதலுக்கு உள்பட்டது -:)

Anonymous said...

//அடுத்த வருஷம் சாம் ஆன்டர்சன் நல்லா ஆடுனத்துக்கு விருது கொடுப்பாங்களா பாஸ்?//

No. It is for J.K. Ritheesh.

ரகுநாதன் said...

@anony...


இல்லை....அவருக்குத்தான் எம்.பி. சீட் கொடுத்தாச்சே....

venkat said...

//சைகிளுக்கே நான் தாங்க மாட்டேன்...சுமோவா...//

சைக்கிலில் வந்தாலே தாங்கமாட்டோம்
என்பதற்காக நடந்தா வரமுடியும்,நாங்க
சுமோவுலதான் வருவோம்.
அதுவும் ஏழு எட்டு வரும். :)