Wednesday, September 30, 2009

என் கேள்விக்கு ஜெ.மோ. பதில்

என்னை சுற்றி எப்போதும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் செய்தியாக இருந்தாலும் என்னவென்றாலும் அதிலும் வந்து கடைசியில் தொங்கி நிற்கிறது ஒரு கேள்வி. இது ஏன்? எப்படி....சில நேரங்களில் அது ஒரு குழந்தையின் அல்லது சிறுவனின் மனோபாவம் என்றும் தோன்றும். பறவை எப்படி பறக்கிறது, நாய் வால் ஏன் சுருள்கிறது, அழகாக மலர்ந்து நிற்கும் ரோஜா செடியில் முள் ஏன் குத்துகிறது என்று போகும் கேள்விகள் ஏராளம்.

இதே போலவே இலக்கியம் சார்ந்த நிகழ்விலும் ஏராளமான கேள்விகள். ஒரு நாவலையோ, சிறுகதை தொகுப்பையோ படித்து விட்டால், பெரும்பாலான நேரங்களில் படிக்கும் போதே ஏராளமான கருக்கள் வந்து மனதை அலைகழிக்கும். அப்படியே மூடி வைத்துவிட்டு மனதில் இருப்பதை கொட்ட வேண்டும் என்று தோன்றும். எழுந்து உட்கார்ந்து ஒரு பக்கம் எழுதியவுடன் வழி தெரியா காட்டினுள் விழி மூடி நிற்பது போல காகிதத்தில் பேனா சுழலும். அதையும் மீறி அல்லது தாண்டி சில கதைகள் எழுதினேன்.

எழுது அதுவே அதன் ரகசியம் என்று சொல்கிறார்கள். எழுதியாச்சு ஆனாலும் நான் எதிர்பார்த்த மாதிரி வரலையே என்று மீண்டும் கேள்விகள்...என்ன செய்வது என்ற குழப்பம், எங்கே தவறு என்ற தவிப்பு.... அப்போதுதான் ஒரு சிந்தனையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு கேள்வியை அனுப்பினேன். அதற்கு அவர் ஒரு விரிவான பதிலையும் அனுப்பினார். அதை இங்கே சென்று படிக்கலாம். மற்றவர்களுக்கும் பயன்படும்.

8 comments:

venkat said...

முயற்சி திருவினையாக்கும்.
அவை ஒரு புள்ளியில் என்னை எழுது என்று சொல்லும். அப்போது எழுத வேண்டியதுதான்

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

ரகுநாதன் said...

நன்றி வெங்கட் சார்.

saranya said...

பயனுள்ள கேள்விதான். எழுத நினைப்புக்கு பயன்படும்

ரகுநாதன் said...

நன்றி சரண்யா

பின்னோக்கி said...

//நாகார்ஜுனர், அபயகரகுப்தர், //அபினவ்குப்தா, நரோபா, புருனோ, //பிளாடினஸ், ரோஸோ, ரஸல், //ஆர்துர் எடிங்க்டன், //ஹீஸர்ன்பேர்க், ஃபூக்கோ //போன்றவர்களின்

நீங்கள் எழுதிய ஜெயமோகன் கடிதத்தில் எனக்கு பாதி கூட புரியவில்லை. நீங்கள் வேறு தளத்திலிருக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது.

ரகுநாதன் said...

@ பின்னோக்கி...

நல்லா பாருங்க...அந்த கேள்விக்கு அடுத்து இருப்பதுதான் நான் கேட்ட கேள்வி...நீங்கள் சொன்ன எதுவும் எனக்கும் தெரியவில்லை.... :) அதனால் நானும் இன்னும் கீழேதான் இருக்கிறேன். :)